வெளியாகி ஏழு வருடங்களை நிறைவுசெய்த யே ஜவானி ஹை தீவானி...
வெளியாகி ஏழு வருடங்களை நிறைவுசெய்தது யே ஜவானி ஹை தீவானி படத்தை ஆல் டைம் ஃபேவரைட் திரைப்படம் என ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்..!
வெளியாகி ஏழு வருடங்களை நிறைவுசெய்தது யே ஜவானி ஹை தீவானி படத்தை ஆல் டைம் ஃபேவரைட் திரைப்படம் என ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்..!
பிரபல இந்தி திரைப்படமான யே ஜவானி ஹை தீவானி வெளியாகி 7 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் #7YEARSOFYJHD என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் டிரென்ட் செய்து ரன்பீர் கபூர் மற்றும் தீபிகா படுகோனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
2013ஆம் ஆண்டு, ஜூன் 1ஆம் தேதி இந்தி மழியில் வெளியாகி ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்ற திரைப்படம் யே ஜவானி ஹே தீவானி. திரைப்படம் வெளியான பிறகு, இப்படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜிக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்தன. ரன்பீர் கபூர், தீபிகா படுகோன், கல்கி கோச்லின், ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடித்த இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிக்குவித்தது. இத்திரைப்படம் இளைஞர்களிடையே பெருமளவில் வரவேற்பு பெற்றது. இப்படத்தில் கபீர் (ரன்பீர்), சுற்றுலாத் துறையில் பெரிதாக சாதிக்க விரும்பும் விரும்பும் ஒரு நபர், ஒரு மலையேற்ற பயணத்தின் போது நைனாவை (தீபிகா) சந்திக்கிறார். நைனா கபீர் மீது காதல் கொள்கிறாள், ஆனால் தன் காதலை வெளிப்படுத்த தயங்குகிறாள். பல வருடங்கள் கழித்து இருவரும் ஒரு நண்பரின் திருமணத்தில் மீண்டும் சந்திக்கிறார்கள்.
இத்திரைப்படம் வெளியாகி 7 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது, ஆனால் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது இந்த திரைப்படம் புத்துணர்ச்சியையும், புது உற்சாகத்தையும் அளிக்கிறது. யே ஜவானி ஹை தீவானி லட்சக்கணக்கானோரின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது, மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பல வசனங்கள் இளைஞர்களின் மனதை தொடும் வகையில் அமைந்தன. 10 வருடங்கள் கழித்து பார்த்தாலும், இந்த திரைப்படம் முதல் முறை பார்ப்பது போன்ற அனுபவத்தை தரும் மந்திரத்தை கொண்டுள்ளது. யே ஜவானி ஹை தீவானி திரைப்படத்தின் 7வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ரசிகர்கள் #7YEARSOFYJHD என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ட்விட்டரில் ஒருவர் ட்வீட் செய்து, "2013ஆம் ஆண்டு, நான் ராக்ஸ்டாரின் இசையில் மூழ்கிவிட்டேன், அப்போது இந்த படம் வெளிவந்தது, அது எனக்கும், நம்மில் பெரும்பாலோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இது தென்றலான பாலிவுட்டின் பொன்னான காதல் சகாப்தத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியது. சிந்தனை உணர்ச்சிகளின் இந்த பயணத்தை மீண்டும் உணரவைத்தது. #7YearsofYJHD."என தனது கருத்தை பகிர்ந்தார். மேலும், #7yearsofyjhd #YehJawaaniHaiDeewani #RanbirKapoor #DeepikaPadukone போன்ற ஹேஷ்டேக்களும் பயன்படுத்தப்பட்டன. 7 வருடங்கள் கடந்த நிலையிலும், ரசிகர்கள் இந்த திரைப்பட்ததை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.
யே ஜவானி ஹை தீவானி இந்திய சினிமாவில் அதிக வசூலைக் குவித்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. 3 இடியட்ஸ் திரைப்படத்திற்குப் பிறகு உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலைக் கடந்த இரண்டாவது திரைப்படம் இதுவாகும். இந்த படத்திற்காக முதன்முதலில் ஒப்பந்தமானவர் ரன்பீர் கபூர். மேலும், வேக் அப் சிட்டை தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் நடித்தார்.
- மொழியாக்கம்: தமிழ்ச் செல்வன்.