சந்தானத்தின் 80ஸ் பில்டப்.. வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ விவரம்
80s Buildup Box Office Collection: சந்தானம் நடித்த 80ஸ் பில்டப் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
80ஸ் பில்டப் வசூல் நிலவரம்: இந்த வாரம் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த சில திரைப்படங்களில் ஒன்று சந்தானம் நடித்த 80ஸ் பில்டப். தற்போது இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
80ஸ் பில்டப் திரைப்படம்:
குலேபகாவலி, ஜாக்பாட் போன்ற திரைப்படங்களை இயக்கிய எஸ்.கல்யாண் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் 80ஸ் பில்டப். 80களின் நாஸ்டால்ஜியா அம்சங்களைக் கொண்டு இந்த திரைப்படம் கலகலப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக 'பூவே உனக்காக' தொடரில் நடித்த நடிகை ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், கே எஸ் ரவிக்குமார், முனீஸ் காந்த், ரெடிங் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், சுந்தர்ராஜன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காமெடி கதை கதத்தில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரைலர், போன்றவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
80ஸ் பில்டப் திரைப்படம் எப்படி?
இதனிடையே நேற்று வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது, மறுபுறம் ஒரு சிலருக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை என்பது போல் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டில் செம ரொமான்ஸ்! போர்வைக்குள் காதல் லீலைகள்-வைரலாகும் வீடியோ!
80ஸ் பில்டப் திரைப்படம் வசூல் நிலவரம்:
இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் முதல் நாளில் 1.2 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இரண்டாவது நாள் உலகளவில் ரூ. 1 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இரண்டு நாட்களில் மொத்தமாக ரூ. 2.2 கோடி வரை உலகளவில் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தானம் வாங்கிய சம்பளம் எவ்வளவு:
இதனிடையே நடிகர் சந்தானம் சம்பளம் எப்படி இருக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. பல படங்களை அவர் தயாரித்தும் நஷ்டத்தை சந்தித்து விட்டார் என்றும் கூறுகின்றனர். முன்னதாக வெளியான கிக் படமும் பிக்கப் ஆகவில்லை. சந்தானம் ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாலே பெரிய விஷயம் எனக் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | வறுமையில் வாடும் பிரபல நடிகர்..வீடு கூட இல்லாமல் பிளாட்பார்மில் வாழும் அவலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ