Santhanam Net Worth: ஹீரோவாக கலக்கி வரும் சந்தானத்தின் சொத்து மதிப்பு இவ்வளவா?

Santhanam Net Worth: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து, இன்று ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கும் சந்தானத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 8, 2023, 09:22 PM IST
  • சந்தானத்தின் தற்போதைய சம்பளம்.
  • நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு.
Santhanam Net Worth: ஹீரோவாக கலக்கி வரும் சந்தானத்தின் சொத்து மதிப்பு இவ்வளவா? title=

நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பின் முழு விவரம்: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து, இன்று ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கும் சந்தானத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம்.

நடிகர் சந்தானம்:
மக்கள் மனங்களில் இடம் பிடித்து பிரபல காமெடி நிகழ்ச்சியாக விளங்கியது, ‘லொள்ளு சபா’ இதன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சந்தானம் (Actor Santhanam). கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்ளில் கதாநாயகனுக்கு சகோதரனாகவும் நண்பனாகவும் நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து “இனி நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன்” (வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்கைப்போடு போடுராஜா) என்று சபதம் எடுத்த இவர் தற்போது காமெடி ஹீரோவாக நடித்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,  டிக்கிலோனா, தில்லுக்கு துட்டு, போன்ற வித்தியாசமான கதையம்சம் நிரம்பிய படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். அதுமட்டுமின்றி தனக்கு ஏற்ற போல் தொடர்ந்து, காமெடி கலந்த படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது.

மேலும் படிக்க | “விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நான்தான் பொறுப்பு” லோகேஷ் கனகராஜ் பளிச் பேட்டி! 

டிடி ரிட்டர்ன்ஸ்:
இதனிடையே கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ் (DD Returns). காமெடி-பேய் கதையாக உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த திரைப்படம் சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியானது. மேலும் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்தது இந்த திரைப்படம். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ZEE5 Tamil (@zee5tamil)

 

மேலும் படிக்க | ஒரு வருடம் கழித்து ஓடிடியில் வெளியான திருச்சிற்றம்பலம் படம்..! எந்த தளத்தில் பார்ப்பது?

சந்தானத்தின் தற்போதைய சம்பளம்:
தன்னுடைய சினிமா கேரியரை துவங்கிய முதல், மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஒருவராக இருந்த சந்தானம், பின்னர் காமெடி படங்களுக்கே மூன்று கோடி முதல் சம்பளம் பெரும் நடிகராக உயர்ந்தார். அந்த வகைதியில் தற்போது ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு இவர் 15 கோடி ரூபாய் முதல் 20 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Santhanam (@santa_santhanam)

நடிகர் சந்தானத்தின் சொத்து மதிப்பு:
இந்நிலையில் சந்தானத்தின் சொத்து  மதிப்பு (Actor Santhanam Net Worth) குறித்து சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. சந்தானத்திற்கு சென்னையில் ஒரு வீடு இருக்கும் பட்சத்தில் சில லாபகரமான ரியல் எஸ்டேட் பிஸினஸ்களும் செய்து வருகிறாராம். இரண்டு சொகுசு கார்களுடன் ஆரம்பத்தில் முதன் முதலில் வாங்கிய காரையும் நியாபகமாக வைத்திருக்கிறாராம் சந்தானம். அதனால் இவரின் சொத்து மதிப்பு 120 கோடி ரூபாயில் இருந்து 150கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பிக்பாஸ் இல்லத்தில் முதல் எலிமினேஷன்: வெளியேறியது யார்? அச்சச்சசோ இவங்களா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News