தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழும் நடிகை சமந்தா. அதன்படி இவர் நடித்துப் பரவலான ரசிகர்களைக் கவர்ந்த காதல் திரைப்படங்களில் ஒன்றான ‘நீ தானே என் பொன்வசந்தம்’ வெளியான நாள் இன்று (2012 டிசம்பர் 15).


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி தற்போது ஜீவா (Jiiva) ஜோடியாக சமந்தா (Samantha) நடிப்பில் வெளியான நீ தானே என் பொன்வசந்தம் (Neethaane En Ponvasantham) திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.


ALSO READ ரிலீசுக்கு பிறகும் சர்ச்சையில் சிக்கிய 'மாநாடு'!


ஜீவா ஜோடியாக சமந்தா நடித்திருந்த இந்த படத்தினை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருப்பார். ஒரு பள்ளி மாணவி தோற்றத்திலும் சரி, அதன் பிறகு பல வருடங்கள் கழித்து பள்ளி ஆசிரியையாக இருக்கும் தோற்றத்திலும் சரி கச்சிதாக பொருந்தியிருப்பார் சமந்தா. படம் வெற்றி தோல்வி என்பதை தாண்டி சமந்தா தமிழில் நடித்த படங்களில் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.


இத்திரைப்படம், ஒரே நேரத்தில் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளியானது. 


படத்தின் கதை
சிறு வயதிலிருந்தே வருணும் (ஜீவா) மற்றும் நித்யாவும் (சமந்தா) நண்பர்களாக இருக்கின்றனர். பிறகு சிறு பிரச்சினையில் இருவரும் சண்டையிட்டு பிரிகிறார்கள். மீண்டும் பள்ளியில் படிக்கும்போது மீண்டும் நட்பாக பழகுகின்றனர். இந்த நட்பு சிறிதுகாலம் வரை தொடர்கிறது. அதன்பின் மீண்டும் பிரிகின்றனர்.


அதன்பிறகு தொடர்பே இல்லாமல் இருக்கும் இவர்கள் கல்லூரிகள் பங்கேற்கும் விழாவில் சந்திக்கின்றனர். அப்போது, மீண்டும் நெருக்கமாக பழகுகின்றனர். இதனால் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. ஒருகட்டத்தில் இவர்களுக்குள் மீண்டும் பிரச்சினைகள் வர சண்டைபோட்டு பிரிகிறார்கள்.


பல வருடங்கள் கழித்து, தனது காதலியான நித்யாவைப் பார்க்க ஒரு கடலோரக் கிராமத்திற்கு வருண் வருகிறார். அங்கு இருக்கும் நித்யாவைச் சந்திப்பதற்காக சில நாட்கள் அங்கேயே தங்கிவிடுகிறார். நித்யாவைச் சந்தித்து பேசும்போது, மீண்டும் இருவருக்கும் சண்டை வருகிறது. அதனால், மறுபடியும் பிரிந்து செல்கிறார்கள்.


சில மாதங்கள் கழித்து சென்னையில் மீண்டும் சந்திக்கின்றனர். வருண் தன்னுடைய திருமணத்தை பழைய காதலியான நித்யாவுக்காக நிறுத்துகிறார். பின்னர் இருவரும் இணைகின்றனர். இதுவே நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் கதையாகும்.


இத்திரைப்படம் பல்வேறு மாறுபட்ட வரவேற்பை பெற்றுள்ளது. அதிகப்படியாக 8 பாடல்களுடன், நினைவெல்லாம் நித்யா திரைப்படத்தில் வரும் பழைய பாடலான "நீ தானே என் பொன் வசந்தம்" என்ற பாடலும் இத்திரைப்படத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேரும் முன்னாள் காதலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR