நடிகர் அஜித்குமார் தனது 61ஆவது படத்தில் தற்போது பிஸியாக இருந்துவருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, அஜித்தின் பெயரில் அவரது மேலாளரான சுரேஷ் சந்திரா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில் கழுதையை வைத்து வாழ்க்கைத் தத்துவம் சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக, அடுத்தவர்களின் தேவையற்ற விமர்சனங்களைக் கண்டு திசை திரும்பாமல் மனதுக்கு சரி எனப் படுவதை செய்யவேண்டும் என அந்தக் கதையில் சொல்லப்பட்டிருந்தது. அஜித்தின் அந்தப் பதிவு இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.


இந்நிலையில், அஜித்தின் அந்தப் பதிவு தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. காரணம்- பாஜக நிர்வாகி ஒருவர். ஆம், தமிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவுத் தலைவராக உள்ள அமர்பிரசாத் ரெட்டி அஜித் சொன்ன அந்தக் கழுதைக் கதையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் விஷயம் அதுவல்ல; அந்தப் பதிவில் நடிகர் அஜித்தை பாஜக தமிழகத் தலைவர் அண்ணமலையுடன் ஒப்பிட்டுள்ளதுதான் இதில் விஷயமே.



அஜித்தும் அண்ணாமலையும் உயர்ந்த சிந்தனைகள் கொண்டவர்கள் எனக் கூறியுள்ள அமர்பிரசாத், தேவையற்ற விமர்சனங்களால் திசை திரும்பாமல் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஒரே மாதிரியான சிந்தனைகளைக் கொண்ட கதைகளை அஜித்தும் அண்ணாமலையும் கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | ‘குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க..’ - அஜித் சொல்லும் ‘கழுதைக் கதை’ யாருக்கு?


நடிகர் அஜித்தைப் பொறுத்தவரை ரசிகர் மன்றங்களைக் கலைத்துவிட்டு தனி வழியில் இயங்குபவர். தான் நடிக்கும் படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்குக் கூட செல்லாதவர். அரசியலில் தன்னைத் தொடர்புபடுத்தவேண்டாம் என அறிக்கையாகவே விட்டவர்.


இப்படியாக அரசியலிலிருந்து அஜித் வெகுதூரம் விலகி நிற்கும் நிலையில், தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையுடன் அஜித்தை ஒப்பிட்டு வெளியாகியுள்ள இந்தப் பதிவு நெட்டிசன்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாகவும், சர்ச்சையாகவும் உருவெடுத்துள்ளது.


மேலும் படிக்க | கமலின் ‘விக்ரம்’ எப்படி இருக்கிறது? - வெளியானது முதல் திரைவிமர்சனம்!- # Vikram Review


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR