திரைப்பட விமர்சகரும் பி.ஆர்.ஓவுமான கெளசிக், மாரடைப்பால் காலமாகியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக வலைதளங்களில் பிரபல விமர்சகர்களுள் ஒருவராக இருந்துவந்தவர் கெளசிக். விமர்சனம் மட்டுமல்லாது, சினிமா புரொமோஷன் மற்றும் பி.ஆர்.ஓ உள்ளிட்ட பணிகளையும் கெளசிக் செய்துவந்தார். ட்விட்டரில் LMK Movie Maniac என்ற கணக்கில் இயங்கிவந்த இவர் சினிமா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிவிப்பது படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வழங்குவது என படு ஆக்டிவாக இயங்கிவந்தார்.


இதனால் சினிமா ரசிகர்கள் முதல் திரை நட்சத்திரங்கள் வரை என பலரும் சமூக வலைதளங்களில் இவரது கணக்கை ஃபாலோ செய்து வந்தனர்.


இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக கெளசிக் மரணம் அடைந்துள்ளார். வீட்டில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சில மணி நேரத்துக்கு முன்பு வரை ட்விட்டரில் பதிவு வெளியிட்டுக் கொண்டிருந்த கெளசிக், அடுத்த சில மணி நேரத்தில் இறந்துவிட்டதாக வெளியான செய்தி, பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


35 வயதே ஆனதாகக் கூறப்படும் கெளசிக் இப்படி மிக இள வயதிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது எப்படி என பலரை விவாதிக்கவும் வைத்துள்ளது.



அதேபோல கெளசிக் தனது வாட்ஸ் அப் முகப்பு பக்கக் குறிப்பில் வைத்திருந்த வரிகளும் வைரல் ஆகிவருகின்றன. அவர் வைத்திருந்த அந்த வாட்ஸ் ஆப் குறிப்பில் நல்ல உடல் நலம்தான் நம்முடைய சொத்து எனவும் மற்றதெல்லாம் அதற்கு பின்புதான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உடல் நலம் பற்றி அக்கறையுடன் பதிவிட்டு இருந்த அவருக்கு  இப்படி ஆகிவிட்டதே எனவும் பலர் வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.


மேலும் படிக்க | வாஜ்பாயாக நடிக்கப்போறது யார் தெரியுமா? - வெளியானது எமர்ஜென்ஸி படத்தின் அப்டேட்!


இந்நிலையில் கெளசிக்கின் மறைவுக்கு திமுக எம்.எல்.ஏவும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகைகள் கீர்த்தி சுரேஷ், அஞ்சலி, சயீஷா என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க | மீண்டும் சர்ச்சைக்குரிய கதையில் கை வைத்த ‘ஜெய்பீம்’ இயக்குநர்!- எந்த வழக்கு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ