இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் ஏ.ஆர் ரஹ்மான் அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை நடத்துவார். சில நாட்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற இருந்தது. பின்னர் மழை காரணமாக அது தடைப்பட்டு போனது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஹ்மானின் 30 வருடங்கள்..


சிறுவயதில் இருந்தே இசைத்துறையின் மீது ஆர்வம் கொண்டிருந்தவர், ஏ.ஆர்.ரஹ்மான். இவர், மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முத்திரை பதித்த கலைஞராக மாறிய அவருக்கு பட வாய்ப்புகளும் ரசிகர் கூட்டமும் குவிய தொடங்கியது. இவர், திரையுலகிற்கு வந்து 30 வருடங்கள் கடந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருந்தார். 


மேலும் படிக்க | ஓடிடியில் வரிசையாக ரிலீசாகும் படங்கள்..! எந்த தளத்தில் எதை பார்க்கலாம்..?


“மறக்குமா நெஞ்சம்…”


ரஹ்மானின் 30 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் “மறக்குமா நெஞ்சம்” எனும் பெயரில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 10 ஆம் தேதி (ஆகஸ்டு) அன்று, பணையூரில் உள்ள ஆதித்யாராம் பாலஸ் சிட்டியில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட இருந்தது. ஆனால் அன்று சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதையடுத்து, நிகழ்ச்சி நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான், தனது ட்விட்டர் பக்கத்தில் “சென்னையில் வானிலை சரியில்லாத காரணத்தினால் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு இசை நிகழ்ச்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..” என்று தெரிவித்திருந்தார். 



வெகு விரைவிலேயே இந்நிகழ்ச்சியின் தேதி மாற்றம் குறித்து அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ரசிகர்கள் சோகத்துடன் திரும்ப சென்றனர். அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து சோகமாக பதிவிட்டிருந்த ட்வீட்டுகளுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்திருந்தார். மேலும் பாதுகாப்பு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 


தேதி மாற்றம்..


ஏ.ஆர் ரஹ்மான் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியின் மாற்றப்பட்ட தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.



அதில், “பொறுமை காத்த சென்னை வாசிகளுக்குமிகவும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இசை நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் தடைப்பட்ட இசை நிகழ்ச்சிக்கு வாங்கியிருந்த டிக்கெட்டுகளை இதற்கு பயன்படுத்தி கொள்ளுமாறும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 


50 நாட்களை கடந்த ‘மாமன்னன்’


மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ‘மாமன்னன்’ திரைப்படம் நேற்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர். நேற்று, மாமன்னன் படத்தின் 50வது நாள் செலிப்ரேஷன் நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் இதில் கலந்து கொண்டார். 


ரஹ்மானின் அடுத்தடுத்த படங்கள்..


ஏ.ஆர் ரஹ்மான், இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமாவை எப்போதோ தொட்டுவிட்ட இசையமைப்பாளராக மாறிவிட்டார். ‘ஆஸ்கர் நாயகன்’ என்று அழைக்கப்படும் இவர் தற்போது பல படங்களில் கமிட் ஆகி பிசியாக நடித்து வருகிறார். 99 சாங்க்ஸ் என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தற்போது பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக, சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘அயலான்’ படத்திற்கு இவர்தான் இசையமைத்துள்ளார். இந்த ஆண்டின் தொடகத்தில் இவர் இசையமைத்திருந்த படங்கள் பல ஹிட் அடுத்து மக்களின் பேராதரவை மீண்டும் ஒருமுறை பெற்றுக்கொடுத்தன. அடுத்து ஒரு மலையாள படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தனுஷின் 50வது படத்திற்கும் இவரே இசையமைப்பாளர். 


மேலும் படிக்க | ரஜினிகாந்த் விரும்பி பார்க்கும் தொடர் இதுதான்..! திரைப்பிரபலம் பகிர்ந்த தகவல்..!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ