ரஜினியை மிஞ்சிய கமல் படம்! ரீ-ரிலீஸில் அதிக வசூல் குவித்த ஆளவந்தான்!
ரஜினியின் முத்து படமும் கமலின் ஆளவந்தான் படமும் ஒரே நாளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக ஏற்கனவே வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த படங்கள் பல தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படுகின்றன. அப்படி சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள், ஆளவந்தான் மற்றும் முத்து. இந்த இரு படங்களுமே ரீ-ரிலீஸில் அதிக வசூலை குவித்துள்ளன.
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட கமல்-ரஜினி படங்கள்..!
1995ஆம் ஆண்டு வெளியாகி திரையரங்கில் 175 நாட்களுக்கும் மேல் ஓடிய படம் முத்து. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய இந்த படத்தை கவிதாலயா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சரத் பாபு, ராதா ரவி, வடிவேலு, விசித்ரா, ஜெயபாரதி என இப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தது. காதல், ஆக்ஷன், ட்ராமா என படத்தில் ரசிக்க கூடிய அம்சங்கள் பல இருந்தன. மலையாளத்தில் வெளியான தென்மாவின் கொம்பாத் படத்தின் தமிழ் ரீ-மேக்தான், முத்து. இப்படம், வெளியான 28 வருடங்கள் கழித்து இப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
கமல்ஹாசன், வில்லனாகவும்-ஹீரோவாகவும் இரு வேடத்தில் நடித்திருந்த படம் ஆளவந்தான். இப்படம் 2001ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இதில், ரவீனா தாண்டோன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சைக்காலஜி த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் கமல் எப்போதும் போல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படம், அப்போது வெளியான போது ரசிகர்களால் பெரிதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தற்போது திரையுலகும் அதை ரசிப்பவர்களின் ரசனைகளும் பெரிதாக மாறியுள்ள நிலையில், படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. 2001ஆம் ஆண்டில் பிறந்திருக்காதவர்கள் கூட, ரீ-ரிலீஸின் போது இப்படத்தை பார்த்து ரசித்தனர்.
இரண்டு படங்களின் வசூல்:
ஆளவந்தான் படம் வெளியான போது போட்டிருந்த பட்ஜெட்டில் பாதி கூட கலெக்ட் செய்யவில்லை என்று கூறப்பட்டது. தற்போது ரீ-ரிலீஸ் ஆகியுள்ள இந்த சமயத்தில், மொத்தம் ரூ.50 லட்ச ரூபாய் கலெக்ட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில், ரஜினியின் முத்து படம், ரீ-ரிலீஸில் மொத்தமாக ரூ.23 லட்சத்தை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கமல், ரஜினியின் படத்தை மிஞ்சியுள்ளதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து தப்பிக்க முயன்ற முக்கிய போட்டியாளர்! பிறகு நடந்தது என்ன?
கமல் Vs ரஜினிகாந்த்:
கோலிவுட்டை பொறுத்தவரை, எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினிகாந்த்-கமல், விஜய்-அஜித் என எப்போதும் படங்கள் போட்டி போடுவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அந்த வகையில், கமல் மற்றும் ரஜினி படங்களில் எது, அதிக வசூல் பெறும், எந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கும் என்பது போன்ற போட்டிகள் இருக்கும். இந்த போட்டியில் பெரும்பான்மையான சமயங்களில் ரஜினியின் படம்தான் வெற்றி பெறும். இந்த சமயத்தில் கமலின் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படம் அதிக வசூல் செய்யப்பட்டது ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
ரசிகர்களின் ஆதரவை அதிகம் பெற்ற இன்னொரு ரீ-ரிலீஸ்:
2012ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படம் அவ்வப்போது ரீ-ரிலீஸ் செய்யப்படுவது வழக்கம். படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து, இப்படம் மீண்டும் வெளியானது. பலர் இந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்தனர். ரசிகர்களின் ஆதரவை பார்த்த தனுஷ், அதற்கு நன்றி தெரிவித்து ஒரு ட்வீட்டும் வெளியிட்டிருந்தார்.
மேலும் படிக்க | பணத்தில் புரளும் எதிர்நீச்சல் நடிகர்கள்.. ஒரு எபிசோடுக்கு இவ்வளவு சம்பளமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ