Bigboss: பற்றவைக்க தயாராகும் சுரேஷ் தாத்தா.. ஆட ரெடியாகும் அபிராமி..!
பிக்பாஸ் அல்டிமேட்டில் விளையாடப்போகும் 4வது மற்றும் 5வது போட்டியாளரை இன்று அறிமுகம் செய்துள்ளார் பிக்பாஸ்.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மட்டும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் ஷோ இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. 5 சீசன்களில் பிக்பாஸ் வீட்டில் அமர்களப்படுத்திய ஸ்டார் போட்டியாளர்கள், இந்த பிக்பாஸ் அல்டிமேட்டிலும் களமிறங்க உள்ளனர். ஏற்கனவே பிக்பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்ட சிநேகன் மற்றும் ஜூலி ஆகியோர் அறிமுகப்படுத்தபட்டனர். அவர்களுக்கு அடுத்தபடியாக 3வது போட்டியாளராக வனிதா விஜயக்குமாரும் இந்த ரேஸில் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில், 4வது மற்றும் 5வது போட்டியாளர்கள் யார்? என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களுக்கான புரோமோவை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. அதன்படி, சுரேஷ் சக்கரவர்த்தி 4வது போட்டியாளராக பிக்பாஸ் அல்டிமேட்டில் பங்கேற்க உள்ளார். அவருக்கான புரோமோவில் பேசியுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி பற்றவைக்கவும், கொளுத்தி போடவும் தயாராவோம் எனக் கூறியுள்ளார்.
இதேபோல் பிக்பாஸ் புகழ் அபிராமியும் பிக்பாஸ் அல்டிமேட்டில் களமிறங்கியுள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்த கையுடன் பிக்பாஸ் வீட்டில் புகுந்த அவருக்கு, இப்போது பிக்பாஸ் அல்டிமேட்டிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காரசாரமான போட்டியாளர்களை தேடிப்பிடித்து பிக்பாஸ் டீம் களமிறக்கியுள்ளதால், அடுத்த 60 நாட்கள் என்டர்டெயின்மென்டுக்கும், விறுவிறுப்புக்கும், பஞ்சமிருக்காது.
ALSO READ | வனிதா Vs ஜூலி: களைகட்டப்போகும் பிக்பாஸ் அல்டிமேட்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR