விடாமுயற்சி-குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படம் எது? இயக்குநர் யார்?
Ajith Kumar Movie After Vidaamuyarchi Good Bad Ugly : நடிகர் அஜித்குமார் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் பிசியாக இருக்கிறார். இந்த படங்களை அடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் எது தெரியுமா?
Ajith Kumar Movie After Vidaamuyarchi Good Bad Ugly : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், நடிகர் அஜித்குமார். இவர் படங்கள் எதுவும் இந்த ஆண்டில் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் இந்த ஆண்டில் அவர் இரண்டு படங்களில் நடித்து பிசியாக இருந்தார்.
அஜித் நடிக்கும் 2 படங்கள்:
கோலிவுட்டின் முக்கிய நட்சத்திரமாக இருப்பவர் அஜித்குமார். இவர் நடிக்கும் படங்கள், ஆண்டிற்கு ஒன்றாவது ரிலீஸாகி வந்தது. ஆனால் இந்த ஆண்டில், அவரது படங்கள் ஒன்று கூட திரையரங்குகளில் வெளியாகவில்லை. காரணம், அவர் இரண்டு படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தார்.
‘துணிவு’ படத்திற்கு பிறகு அஜித்குமார் கமிட்டான முதல் படம் விடாமுயற்சி. இந்த படத்தை, மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். 2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால், முதல் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டு பின்னர் படப்பிடிப்பு தொடங்கவே வெகு நாட்கள் பிடித்தது. அஜித் பைக் டூர் சென்றதனால் ஷூட்டிங் தொடங்க தாமதம் ஆனது என ஒரு தரப்பினர் கூற, இன்னொரு தரப்பினர் ஷூட்டிங் தாமதமாக தொடங்கியதால்தான் அஜித் பைக் டூர் சென்றார் என்றும் கூறி வந்தனர். ஒரு வழியாக அஜர்பைஜானில் படப்பிடிப்பு நடைப்பெற்றது. ஓராண்டிற்கும் மேலாக பட வேலைகள் நடைப்பெற்று வந்தன. சில நாட்களுக்கு முன்புதான் இப்படத்தில் அஜித்-த்ரிஷாவிற்கு இடையேயான பாடல் கடைசியாக படமாக்கப்பட்டது.
விடாமுயற்சி படத்தை அடுத்து அஜித் கமிட்டான படம், குட் பேட் அக்லி. இந்த படத்தை அஜித்தின் ரசிகரும் இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த 3 மாதங்களிலேயே மடமடவென நடந்து முடிந்தது. சில நாட்களுக்கு முன்பு அஜித் தன் பங்கு பட காட்சிகளில் நடித்து முடித்தார். இதில் அவர் மூன்று விதமாக கெட்-அப்களில் வருகிறார்.
மேலும் படிக்க | குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய தோற்றம்! கையில் டாட்டூவுடன் புது போட்டோ..
புதிதாக நடிக்கும் படம்..
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களுக்கு பிறகும் எந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. இந்த நிலையில்தான் விரைவில் ஒரு ஹிட் இயக்குநருடன் அவர் கூட்டு சேர இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
நடிகர் அஜித்தை வைத்து, 2011ஆம் ஆண்டில் மங்காத்தா படத்தை இயக்கி பெரும் வெற்றியை கொடுத்தவர் வெங்கட் பிரபு. தற்போது, அவர்தான் அஜித் படத்தின் அடுத்த இயக்குநர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வந்த போதே, தி கோட் படத்தின் வேலைகளும் வெளிநாட்டில் நடந்தது. அப்போது வெங்கட் பிரபுவும் அஜித்தும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. இதைத்தொடர்ந்து, இவர்கள் இருவரும் சேர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வேறு இயக்குநருடனும் பேச்சு வார்த்தை?
நடிகர் அஜித்திற்கு பிடித்த மற்றும் லக்கியான இயக்குநராக இருப்பவர் சிறுத்தை சிவா. வேதாளம், வீரம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய இவர், அடுத்து அஜித்திற்காக ஒரு கதையை தயார் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அஜித்திடம் விரைவில் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டு வருகிறாராம் சிவா. எனவே, அஜித்தின் அடுத்த பட இயக்குநர் இவராகவும் இருக்கலாம் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் படிக்க | விடாமுயற்சி vs குட் பேட் அக்லி! ஒரே நாளில் ரிலீஸாகும் அஜித்தின் 2 படங்கள்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ