குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் புதிய தோற்றம்! கையில் டாட்டூவுடன் புது போட்டோ..

Actor Ajith Kumar Recent Look In Good Bad Ugly Movie : ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக, உடல் எடையைக் குறைத்த அஜித் குமாரின் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Actor Ajith Kumar Recent Look In Good Bad Ugly Movie : தமிழ் திரையுலகின் டாப் நட்சத்திரமாக வலம் வரும் அஜித் குமார், தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக ஸ்பெயின் நாட்டில் நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில், அஜித் ஸ்பெஷலான லுக்கில் தோன்றுகிறார். இதையடுத்து, சமீபத்தில் வெளியான இவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

1 /8

அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர், இயக்குநர் என்பதை தாண்டி அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார். 

2 /8

குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் தனது தோற்றத்தை புதிதாக மாற்றியிருக்கிறார். இது, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் அஜித் குமார்  உடல் எடையை குறைத்து இருப்பது போன்று இருக்கிறது. 

3 /8

விடாமுயற்சி படத்தில் பட வேலைகள் முடிந்த நிலையில், தற்போது புதிய படத்திற்குத் தயாரான அஜித் அப்படத்தின் வேலைகளில் முழு வீச்சாக செயல்பட்டு வருகிறார். குட் பேட் அக்லி படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். 

4 /8

நடிகர் பிரசன்னா அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் இணைந்தது குறித்துப்  சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். “அஜித் குமாருடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டேன் அது தற்போது உண்மை ஆகிவிட்டது” என்று கூறியிருக்கும் அவர் தன் மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்திருக்கிறார். 

5 /8

மகிழ் திருமேனி இயக்கிய 'விடாமுயற்சி'  படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதிலும் த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். அடுத்து குட் பேட் அக்லி படத்திலும் இந்த ஜோடி கைக்கோர்த்திருக்கிறது.   

6 /8

குட் பேட் அக்லி படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 /8

அஜித், இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். இது அஜித் ரசிகர்களிடம்  படம் குறித்த ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. 

8 /8

நடிகர் அஜித் குமாரின் லேடஸ்ட் போட்டோவில் இரண்டு கைகளிலும் வரையப்பட்டிருக்கும் டாட்டூவும் கவனம் ஈர்த்திருக்கிறது. இதில் அஜித் மாஸ் லுக்கில் ஹாலிவுட் நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு புதியத் தோற்றம் கொண்டிருக்கிறார். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது.