Actor Ajith Kumar Latest Health Update: சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித் குமார் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று மருத்துவ நிபுணர்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவரின் மூளையில் கட்டியிருந்ததாகவும், அதனை மருத்துவர்கள் அகற்றியிருப்பதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அந்த தகவல்களை நடிகர் அஜித் குமார் வட்டராத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 


காதுக்கு கீழ் புடைப்பு 


குறிப்பாக, நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி இல்லை எனவும் அறுவைச் சிகிச்சையும் செய்யப்படவில்லை எனவும் அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தரப்பில் இருந்து தகவல்கள் வெளியானது.  விடாமுயற்சி திரைப்படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் மற்றும் அஜித்தின் நெருங்கிய நண்பரான வெற்றி துரைசாமி மரணத்துக்கு பின்னர் கொஞ்சம் மனதால் சோர்ந்து போனவர் நார்மல் செக்-அப்புக்குதான் அப்போலோ போனார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


சென்ற இடத்தில் ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது, அவரின் காதுக்கு கீழே உள்பகுதியில் சின்ன பல்ஜ் எனப்படும் புடைப்பு உள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Ajith Kumar : அஜித்திற்கு மூளையில் கட்டியா? உண்மை என்ன? சுரேஷ் சந்திரா விளக்கம்..


மருத்துவர்கள் சிகிச்சை


இந்த புடைப்பினால் பாதிப்பு ஏதுமில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இருப்பினும் வெறும் அரை மணி நேரத்தில் இதை சரி செய்து விடலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மருத்துவர்கள் பரிந்துரையை ஏற்று நடிகர் அஜித் குமார் உடனடியாக அதனை சரி செய்ய கூறியுள்ளார் என கூறப்படுகிறது. 


இதை அடுத்து, நேற்றே அந்த பல்ஜ் அரை மணி அவகாசத்தில் நீக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட நிலையில், விரைவில் டிஸ்சார்ஜும் ஆகிவிடுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்த மைனர் ஆபரேஷனால் அவரின் எந்த பணியும், நடவடிக்கையும் ஒரு சதவீதம் கூட பாதிப்படையாது என்றும் சுரேஷ் சந்திரா தரப்பில் உறுதிப்பட தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


ஈபிஎஸ் ட்வீட்


மேலும் திட்டமிட்டப்பட்டி அஜித் குமார் அடுத்த வாரம் அஜர்பைஜானில் விடாமுயற்சி கிளம்பி விடுவார் என்றும் ஊடகங்களில் வெளியான தகவல்களை போல் 3 மாத ஓய்வு என்பதெல்லாம் தவறான தகவல் எனவும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா கூறியதாக தகவல் வெளியாகின. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவல்களும், அறிக்கைகளும் நடிகர் அஜித் குமார் தரப்பில் இருந்தோ, அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் இருந்தோ வரவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


இதற்கிடையில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அஜித் குமாரின் உடல்நிலை விரைவில் குணமடைய வாழ்த்துவதாக அவரது X பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில்,"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சகோதரர் 
நடிகர் அஜித்குமார் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டிருந்தார். 


லேட்டஸ்ட் அப்டேட்


இந்நிலையில், அஜித் குமார் ஐசியூவில் இருந்து பொது வார்டுக்கு மாறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொது வார்டுக்கு மாறியுள்ள நிலையில், விரைவில் நடிகர் அஜித் குமார் வீடு திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | Ajith Kumar : அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி! அய்யய்யோ என்னாச்சு? ரசிகர்கள் பதற்றம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ