துணிவு ப்ரோமோஷனில் அஜித்?... வைரலாகும் தகவல்
துணிவு படத்தின் ப்ரோமோஷனில் கலந்துகொள்ள அஜித்திடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத்துடன் இணைந்திருக்கிறார் அஜித். வினோத்துடன் மீண்டும் அஜித் இணைந்திருக்கும் படமான துணிவு க்ரைம் சப்ஜெக்ட்டை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வலிமை போல் துணிவு தங்களை ஏமாற்றாது எனவும், க்ரைம் சப்ஜெக்ட்டிலும் அதற்கான டீட்டெயிலிங்கிலும் வினோத் அட்டகாசம் செய்பவர் என்பதால் இந்தப் படம் நிச்சய்ம் பந்தயம் அடிக்கும் என்கின்றனர் அஜித்தின் ரசிகர்கள்.
மேலும், படம் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1987ஆம் ஆண்டு நடந்த வங்கிக்கொள்ளையை அடிப்படையாக வைத்துத்டான் துணிவு உருவாகியிருப்பதாக தெரிகிறது. தீரன் படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. அதேபோல் தற்போது துணிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்களாக அமையும் என்பதால் மிகப்பெரிய நம்பிக்கையுடன் இருக்கின்றனர் ஏகே ரசிகர்கள்.
படமானது பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் துணிவு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்டை நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தன்னுடைய படத்துக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் அஜித் கலந்துகொண்டு 10 வருடங்களுக்கும் மேலாகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உயிருடன் இருந்தபோது நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஜித், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சொல்லி எங்களை மிரட்டுகிறார்கள் என பகிரங்கமாக மேடையிலேயே கருணாநிதியிடம் முறையிட்டது நினைவுகூரத்தக்கது. அதனால் இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அஜித் நிச்சயம் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் ஒருதரப்பினர்.
மேலும் படிக்க | இந்தப் பாடலை பாடியது உங்கள் விஜய் - வாரிசு முதல் சிங்கிள் அப்டேட்
முன்னதாக படத்தில் நடித்தவர்களின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. நேற்றுக்கூட நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்துக்கு டப்பிங் கொடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தளபதியுடன் இணையும் புரட்சித் தளபதி? - அடுத்தடுத்து அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ