நடிகர் அஜித் ஹெச். வினோத் இயக்கிவரும் படத்தில் நடித்துவருகிறார். அஜித்தின் 61ஆவது படமான இதில் அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துவருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தை போனிகபூர் தயாரித்துவருகிறார். கல்லூரி பேராசிரியராக நடித்துவரும் அஜித், வலிமையில் இருந்ததுபோல அல்லாமல் இதில் வித்யாசமான கெட்டப்பில் நடிக்கவுள்ளாராம். 


இதற்காக உடல் எடை முதல் ஹேட் கட் வரை அனைத்தையும் மாற்றி புதிய லுக்குக்கு மாறியுள்ளார் அஜித். புதிய லுக்கில் அவர் தோன்றும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன.


                               


இந்நிலையில், புதிய லுக்குடன் துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில் அவர் காணப்படும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கறுப்பு நிற டீசர்ட்டுடன் தோன்றும் அஜித், துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு சென்றபோது இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.



இது மட்டுமல்லாமல் துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான பிரபல துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங்குடன் அவர் இணைந்து தோன்றும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிவருகின்றன.


மேலும்  படிக்க | ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR