நடிகர் அஜித், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் தற்போது நடித்துவருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை போனிகபூர் தயாரித்துவருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் படத்தை முடித்த கையோடு அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். வலிமை படத்துக்குப் பின்னர் தனது கெட்டப்புகளை மாற்றியுள்ள அஜித் புதிய லுக்கில் காணப்படும் புகைப்படங்களும் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன.


அஜித்தைப் பொறுத்தவரை ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமான கணக்குகள் எவற்றையும் வைத்துக்கொள்ளவில்லை. தனது மேலாளரும் பி.ஆர்.ஓவுமான சுரேஷ் சந்திராவின் சமூகவலைதளக் கணக்குகள் வாயிலாகவே தனது அறிக்கைகள் மற்றும் தகவல்களை அஜித் வழங்கிவருகிறார்.


அந்த வகையில் அஜித்தின் கருத்தாக சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காதுகள் பாதுகாப்பு குறித்து நடிகர் அஜித் வலியுறுத்தி உள்ளார்.


டின்னிடஸ் எனப்படும் காது இரைச்சல் பிரச்சினை பற்றி அதில் சுட்டிக்காட்டியுள்ள அஜித், காதுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். உலகம் முழுக்கவே காணப்படும் இந்தக் காது இரைச்சல் பிரச்சினையானது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது.


மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு இப்படியொரு ரோலா? அதுவும் இதுவரை பண்ணாத கேரக்டர்!



குறிப்பாக காதுகளுக்குள் அழுக்கு தேங்குதல், வயது மூப்பு, கிருமி தொற்று, அதிகமான ஒலி அல்லது காதில் காயம் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த காது இரைச்சல் பிரச்சினை ஏற்படுகிறது. முறையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தக் காது இரைச்சல் பிரச்சினையைத் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.


காது இரைச்சல் பிரச்சினையை எளிய வழியில் சரிசெய்ய பல்வேறு ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் அஜித், காது இரைச்சல் பற்றி அக்கறையுடன் வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.


மேலும் படிக்க | விஜய் நடிக்கப்போகும் அடுத்த 4 படங்கள் என்னென்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ