காதல் கிசு கிசு, வீரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவர் பாலா. ஆரம்பத்தில் ஹீரோ ரோலில் வந்தவர் பின்பு துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பத்திதார். அஜித்தின் வீரம் படத்தில் 5 சகோதரர்களுள் ஒருவராக நடித்திருப்பார். பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்லீரல் பிரச்சனை:


பாலா, கடைசியாக ஷஃபீகிந்தே சந்தோஷன் என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். இதையடுத்து இவர் கடந்த மார்ச் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கிட்டத்தட்ட 1 வருடமாக இந்த பிரச்சனை உடலில் இருப்பதாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் இயல்பாக இருந்த இவரது உடல்நிலை, சில நாட்களுக்குள்ளேயே மோசமடைய தொடங்கியது. இவருக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், பாலாவிற்கு கல்லீரல் தானம் செய்ய ஆரம்பத்தில் யாரும் கிடைக்கவில்லை. இதனால், அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது. இதையடுத்து, அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைப்பெற்றது. 


மேலும் படிக்க | ‘ராகவன் மீண்டும் வறார்’ ரீ-ரிலிஸ் ஆகிறது கமலின் வேட்டையாடு விளையாடு படம்-எப்போது தெரியுமா?


உடல் உறுப்பு தானம் செய்த நபர்..


நடிகர் பாலா ஆபத்தான நிலையில் இருந்த போது, அவருக்கு ஜேக்கப் ஜோசப் என்ற நபர் தனது கல்லீரலை தானம் செய்துள்ளார். இப்படி அவர் செய்வதனதால் அவருக்கு இனி வரும் காலங்களில் ரிஸ்க் வரலாம் என டாக்டர்கள் கூறினாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது அந்த நபர் பாலாவிற்காக தனது கல்லீரலை கொடுத்துள்ளார். இந்த செய்தியை, பாலவே சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். 


“மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர்..”


நடிகர் பாலாவின் உடல் நிலை மோசமடைந்த போது, அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவர் உயிரை காப்பாற்ற முடியாது என கைவிரித்து விட்டனராம். ஒரு கட்டத்தில் பாலாவை நிம்மதியாக சாக விடுங்கள் என்று கூட அவர்கள் பாலாவின் குடும்பத்தினரிடம் கூறிவிட்டனராம். இந்த நிலையில்தான் நடிகர் பாலாவிற்கு தனது கல்லீரலை கொடுப்பதற்கு ஜேக்கப் ஜோசப் முன்வந்துள்ளார், இப்போது, அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், நடிகர் பாலா உடல் நலத்துடன் வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து அவர் கொடுத்துள்ள பேட்டியில், “மருத்துவர்களே கை விரித்த நிலையில் என் உயிரை காப்பாற்றுவதற்கான அதிசயம் நடந்தது” என்றார் பாலா. மேலும், “கல்லீரல் தானம் செய்வதால் பிரச்சனை ஏற்படும் என ஜேக்கப்பிடம் மருத்துவர் கூறினார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாது அவர் எனக்காக ரிஸ்க் எடுக்க தயார் என்றார். அவர் மட்டுமன்றி அவரது மொத்த குடும்பமே எனக்காக இந்த ஆபத்தை எதிர்கொண்டனர்..” என்று உருக்கமாக பேசியுள்ளார் பாலா.


அந்த நபர் எதற்காக இவருக்கு இத்தனை தடைகளைதாண்டி உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஜேக்கப்பின் குடும்பத்தினரும் அவரும் பாலா செய்த பல நற்செயல்களையும் தான தர்மங்களையும் பார்த்துள்ளதாகவும் அதனால்தான் அவர்கள் தயங்காமல் உதவ முன்வந்தததாகவும் அவர் குறிப்பிட்டார். 


அதற்குள் உடற்பயிற்சி..!


நடிகர் பாலாவின் உடல்நலம் தற்போதுதான் சற்று தேரியுள்ளது. இந்த நிலையில், அவர் ஜிம்மிற்கு சென்றுவருவதாக தனது நேர்காணலில் அவர் கூறியுள்ளார். மருத்துவமனையில் இருந்து வீடு திருமபி 40 நாட்கள் கூட ஆகாத நிலையில் அதற்குள் எதற்கு ஜிம்மிற்கு செல்கிறீர்கள் என மருத்துவர்கள் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க |  மாமன்னன் படத்தின் ‘ஜிகுஜிகு ரயில்’ பாடலில் க்யூட்டாக நடனமாடும் ஏ.ஆர்.ரஹ்மான்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ