கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்து வெளிவந்த படம் வேட்டையாடு விளையாடு. க்ரைம்-சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்டையாடு விளையாடு:
சுமார் 17 வருடங்களுக்கு முன் கமல் ‘டி.சி.பி ராகவன்’ ஆக களம் இறங்கிய படம், வேட்டையாடு விளையாடு. சூர்யாவை வைத்து ‘காக்க காக்க’ க்ரைம்-த்ரில்லர் படத்தை இயக்கிய கெளதம் மேனன், அடுத்து இயக்கிய சைக்கோ த்ரில்லர் படம் இதுதான். காதல் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு உணர்வுகளை கடத்துவதில் கைதேர்ந்தவரான கெளதம், இந்த படத்தில் காவல் அதிகாரிக்கும் காதல் வரும் என்பதை அழகாக காண்பித்திருந்தார். கமல் ஹாசன், ராகவன் எனும் போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்திலும் ஜோதிகா, ஆராதனா எனும் கதாப்பாத்திரத்திலும் கச்சிசதமாக பொருந்தியிருந்தனர். வழக்கமாக க்ரைம்-த்ரில்லர் படங்களை ரீ-வாட்ச் செய்ய பலரும் விரும்பமாட்டார்கள். ஆனால், அதையெல்லாம் உடைத்தெரிந்து எத்தனை முறை தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பானாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டிய படம் வேட்டையாடு விளையாடு.
மேலும் படிக்க | கைகுலுக்க வந்த விக்கி-கண்டும் காணாமல் சென்ற சல்மான் கான்-வைரலாகும் வீடியோ..!
ரீ-ரிலீஸ்:
மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்த இப்படம், அடுத்த மாதம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் இப்போது டிஜிட்டலில் மெருகூட்டப்பட்டுள்ளது. முன்னதாக கமலின் ‘ஆளவந்தான்’ படம் மீண்டும் எடிட் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீரியல் கில்லர் கதை:
அன்று வேட்டையாடு விளையாடு படத்தில் அமுதன் எனும் சைக்கோ கில்லர் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் டேனியல் பாலாஜி. இன்று இவரும் தமிழ் சினிமாவின் பயங்கர வில்லன்களுள் ஒருவர் என்ற பெயர் பெற்றிருக்கிறார். காக்க காக்க மற்றும் வேட்டையாடு விளையாடு படங்கள் மூலம் பலமான கதைகளுக்கு கெளதம் வாசுதேவ் மேனன் போட்ட அடித்தளம்தான் இன்று அவரை வெந்து தணிந்தது காடு போன்ற படங்களுக்கு கதை எழுத உதவியுள்ளது. அதைபோலே தமிழில் முதன் முதலில் ஹோமோசெக்ஸ் குறித்த ஆரம்ப புள்ளி வைத்த திரைப்படம் இதுதான்.
“என் கண்ணு வேணும்னு கேட்டியாமே..”
அடிதடி சண்டை காட்சியுடன் ஹீரோ அறிமுகவாததுதான் தமிழ் சினிமாவின் வழக்கம். ஆனால், அசால்டாக வில்லனின் கோட்டைக்குள் நுழைந்து கண்ணை விரித்துக்காட்டி, “ என் கண்ணும் வேணும் கேடியாமே..” என்று கமல் சொல்லும் இடம் கொலை மாஸ் சொல்ல வைத்தது. படத்தின் காதல் காட்சிகள் இன்று கூட பார்ப்பதற்கு சுவாரசியமாகவும் புதிதாக உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், ஹாலிவுட் பாணியில் ஆக்ஷன் படமாகத் தயாரிப்பதற்கு கோலிவுட் கிடைத்துள்ள மிக நெருக்கமான படம் இது.
படத்தின் வசூல்:
வேட்டையாடு விளையாடு படம், 24 கோடி செலவில்தான் அன்று எடுக்கப்பட்டது. ஆனால் அப்போதே சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதற்கு காரணம் முக்கியம் படத்தின் கதையும் அதற்கேற்ற ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் இசையும்தான். குறிப்பாக “மஞ்சள் வெயில் மறையுதே..” பாடலும் “பார்த்த முதல் நாளே..” பாடலும் அப்போதைய பட்டன் போனிலேயே ரிங் டோனாக வைக்கப்பட்டன. விறுவிறுப்புக்கு ஏற்றவாறான பின்னணி இசை கமலின் நேர்த்தியான நடிப்பு என மேலும் பல காரணங்களும் வெற்றிக்கு காரணம்.
கமல்-ஜோதிகா ஜோடி:
தெனாலி படத்தில் 2006அம் ஆண்டு இணைந்து நடித்த கமலும் ஜோதிகாவும் சுமார் 6 வருடங்களுக்கு பிறகு ஒன்றாக இணைந்து நடித்த படம், வேட்டையாடு விளையாடு. இதில், இவர்களுக்குள்ள காதல் இருக்குமே தவிர அந்த காதலை வெளிப்படுத்தும் வகையிலான ரெமேண்டிக் காட்சிகள் ஒன்று கூட இருக்காது. ஆனால் காதலை இருவரும் கண்களாலேயே கடத்துவர். இது கெளதம் மேனன் படம் என்பதால் ஜோதிகாவின் நடிப்பிலும் நிறைய மாற்றங்கள் தெரியும் .
வேட்டையாடு விளையாடு 2?
இந்தப் படத்தின் 2-ம் பாகம் பேச்சுவார்த்தையில் இருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், யாருமே அதிகாரபூர்வமாக இதகுறித்த அறிவிப்பினை தெரிவிக்கவில்லை. கமல், வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ், கௌதம் மேனன் மூவரும் இருக்கும் புகைப்படம் வெளியானதால், இந்தக் கூட்டணி 'வேட்டையாடு விளையாடு 2 படத்தில் இணைய உள்ளனர் என சில ரசிகர்கள் யூகித்தனர். ஆனால், இதற்கு மேல் இந்த படத்தின் 2ஆம் பாகம் வருவது கேள்வி குறிதான்.
மேலும் படிக்க | Priya Atlee: கேன்ஸ் திரைப்பட விழாவில் ட்வின்னிங் செய்த பிரியா-அட்லீ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ