சியான் விக்ரமின் அசத்தல் என்ட்ரி - வைரலாகும் வீடியோ
சியான் விக்ரம் ட்விட்டரில் பதிவு செய்திருக்கும் வீடியோ இணையத்தை கலக்கிவருகிறது
தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாநாயகர்கள் இருந்தாலும் சிலருக்கு மட்டும்தான் அனைவரும் ரசிகர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட சில நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். நீண்ட போராட்டத்துக்கு பிறகு சேது படத்தின் மூலம் தனது அத்தியாயத்தை எழுதத் தொடங்கிய விக்ரம், தனக்கு எந்தக் கதாபாத்திரம் வந்தாலும் அந்தக் கதாபாத்திரத்திற்காக தன்னை வார்த்து செதுக்கிக்கொள்பவர். இவருக்கு உலகம முழுவதும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். சமீபத்தில் இவர் நடித்த படங்கள் சரியான வெற்றியை அடையாவிட்டாலும் அவரது அடுத்த படத்துக்கென ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் கோப்ரா ப்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஸ்ரீநிதி கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விக்ரம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் படம் அடுத்த மாதம் 30ஆம் தேதி வெளியாகிறது. அதனையடுத்து பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம். தற்போது அந்தப் படத்துக்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன.
இந்தச் சூழலில் பெரும்பாலான நடிகர்கள் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கும்போது விக்ரம் மட்டும் ட்விட்டரில் இல்லாமல் இருந்தார். தற்போது சியான் விக்ரம் ட்விட்டரில் என்ட்ரி ஆகியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோவில், “ஹாய்… எல்லாருக்கும் வணக்கம். இது நான்தான் சியான் விக்ரம். நிஜமாவே நான்தான். மாறுவேஷத்தில் இல்லை. ரஞ்சித் படத்துக்காக நான் ரெடி ஆகிட்டு இருக்கேன். ட்விட்டர்ல இருந்தா நிறைய விஷயங்கள் எல்லாருக்கும் சொல்லிடலாம். ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும் அப்படின்னு சொன்னாங்க.
இங்க நான் கொஞ்சம் லேட். கிட்டத்தட்ட 10 - 15 வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன் ட்விட்டர் தொடங்கி. ரொம்ப லேட்டா வந்திருக்கேன். ஆனா இதுதான் அதற்கான சரியான நேரம் எனவும் நினைக்கிறேன். நமக்காக அன்பு காத்துக்கொண்டு இருக்கிறதென நிறைய பேர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கேன். அதை அனுபவிப்பதற்கு ட்விட்டர்ல ஜாயின் ஆகி இருக்கேன். உலகம் முழுவதும் உள்ள எனது ரசிகர்களே, நண்பர்களே ‘ஐ லவ் யூ’” என பேசியுள்ளார். தற்போது விக்ரமின் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | ஏகே 63 திரைப்படத்தை இயக்கப்போவது இவர்களா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ