சத்யா கொலை... ஒரு தந்தையாக மனம் குமுறுகிறது - நடிகர் தாமு உருக்கம்
மாணவி சத்யா கொலையை நினைத்து ஒரு தந்தையாக மனம் குமுறுகிறது என நடிகர் தாமு தெரிவித்துள்ளார்.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23). இவர் மீது ஏற்கனவே ஆர்1 மாம்பலம் காவல் நிலையத்திலும், பரங்கிமலை காவல் நிலையத்திலும் வழக்குகள் இருக்கின்றன. இந்தச் சூழலில் சதீஷ் அதே பகுதியைச் சேர்ந்த பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்துவந்திருக்கிறார். ஆனால் சதீஷின் காதலை மாணவி ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் தொடர்ந்து அந்த மாணவியை பின் தொடர்ந்து தன் காதலை ஏற்கும்படி நச்சரித்துள்ளார். அப்படி நேற்றும் அவர் மாணவியை நச்சரித்துள்ளார். வழக்கம்போல் காதலை ஏற்க மறுத்த மாணவியிடம் சதீஷ் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில்,பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் வந்துகொண்டிருந்தபோது மாணவியை சதீஷ் தண்டவாளத்தில் தள்ளிவிட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே மாணவி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே நுங்கம்பாக்கத்தில் ஸ்வாதி என்ற பெண் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் போலவே இந்த சம்பவமும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை கேள்விப்பட்ட மாணவியின் தந்தையும் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். அது மேலும் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே மாணவியை கொலை செய்த சதீஷ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் தாமு செய்தியாளர்களிடம் பேசுகையில், “சினிமாவில் போதை காட்சிகளில் மது அருந்தக்கூடாது என எழுத்து போடுவது ஏமாற்றுவேலை, இது பெரிய மனமாற்றத்தை தராது. நான் திரைப்படம் இயக்கினால் போதை காட்சிகள் இல்லாமல் எடுப்பேன். சினிமா என்பது பொழுதுபோக்கு தான் நல்ல சினிமா என்பது படம் பார்க்கும்போது டைம் போவதே தெரியாமல் இருப்பது தான் நல்ல சினிமா அது தான் வெற்றிப்படமாக அமையும். திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை உருவக்கேலி செய்வது தடுக்க வேண்டும். யார் மனதையும் காயப்படுத்தக்கூடாது.
மேலும் படிக்க | பெண் இயக்குநர்கள் வந்தால் சண்டையும் கூடவே வரும் - பீஸ்ட் பட நடிகரின் சர்ச்சை பேச்சு
சென்னை கல்லூரி மாணவி சத்யா கொலை சம்பவத்தை நினைத்தால் அழுகை வருகிறது, பெண் பிள்ளைகளை பெற்ற ஒரு தந்தையாக எனது உள்ளம் குமுறுகிறது, நீதிபோதனைகளை பள்ளி வகுப்பிலயே கற்றுக்கொடுக்க வேண்டும். மாணவர்கள் மீது சினிமாத்துறையினர் அக்கறை காட்ட வேண்டும், சினிமாவில் பள்ளி சீருடையுடன் காதலிப்பது போன்ற காட்சிகளை நிஜம் என இளைஞர்கள் நம்புகின்றனர். இதனால் இளைஞர்கள் மனதில் தாக்கம் ஏற்படும் எனவே இது போன்ற காட்சிகளை தவிர்க்கவேண்டும், சினிமா மூலம் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். மாணவர்களுக்கு கல்லீரல் குறித்து பாடம் வைத்தால் மதுபழக்கத்தை ஆளாகமாட்டார்கள், மாணவர்கள் கிங்காக வர வேண்டும் என்றால் நோ ஸ்மோக்கிங், நோ ட்ரிங்கிங்” என்றார்.
முன்னதாக, உலக உணவு தினத்தினை முன்னிட்டு மதுரையில் அட்சய பாத்திரம் என்ற அமைப்பின் சார்பில் பார்வையற்றோருக்கு அரிசி, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருட்கள் மற்றும் இரவு உணவளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரைப்பட நடிகர் தாமு கலந்துகொண்டு பார்வையற்றோர்களுக்கு அரிசி உணவுப்பொருட்களை வழங்கினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ