1930 மூலம் பெறப்படும் புகார்களுக்காக e-Zero FIR முறையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி நிதி மோசடி தொடர்பான புகார்களை தெரிவிப்பவர்களுக்கு இது மிக முக்கியமானதாகும். இதன் பயன் என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
பெங்களூருக்கு அடுத்த முக்கிய தொழில் மையமாக வளர்ந்து வரும் ஓசூருக்கு சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டமும் தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. முதலாவது, சூளகிரி அருகே தேர்வு செய்யப்பட்ட இடம் பாதுகாப்பு காரணங்களால் ஏற்றதல்ல என்று மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அப்பகுதி ராணுவ விமான நடவடிக்கைகளுடன் தொடர்புடையதால் அந்த இடத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இரண்டாவது, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 150 கிலோமீட்டர் வரம்பு தொடர்பான ஒப்பந்தம். அதன் காரணமாக குறிப்பிட்ட காலக்கெடு முடியும் வரை புதிய வணிக விமான நிலையம் அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. அடுத்ததாக, புனித நகரமான ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், மண் ஆய்வு முடிவுகள் எதிர்பார்ப்புக்கு மாறாக வந்ததாக கூறப்படுகிறது. முடிவாக, வேலூரில் பயணிகள் விமான சேவையைத் தொடங்கும் நோக்கில் டெர்மினல் கட்டிடம், ரன்வே உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதுகாப்பு அனுமதி மற்றும் வணிக விமான சேவைக்கான இறுதி உரிமங்கள் கிடைக்காததால், தயாராக உள்ள நிலையம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. தேவையான அனுமதிகள் கிடைத்த பிறகே அங்கிருந்து விமான சேவை தொடங்கும் நிலை உள்ளது.
Mobile Repair and Service Training : தமிழ்நாடு அரசு 'மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவை பயிற்சி' குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மூன்று நாள் பயிற்சி குறித்த முழு விவரம் இதோ...
Kalaignar Magalir Urimai Thogai : கடந்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, 2026 தேர்தலில் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமே கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்தான் என தகவல்கள் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்தான் திமுக அரசின் துருப்புச்சீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது எப்படி தோல்விக்கான காரணம் என்பதை இங்கு காணலாம்.
கர்நாடகாவில் அதிரடி ஐ.பி.எஸ். அதிகாரியாக அறியப்பட்ட அண்ணாமலை, பாஜகவில் இணைந்த சில ஆண்டுகளிலேயே தமிழக தலைவராக உயர்ந்தார். அவரது நேரடி அரசியல் பாணியும், ஆளுங்கட்சிக்கு எதிரான கடுமையான விமர்சனங்களும் இளைஞர்களிடையே அவருக்கு தனி ஆதரவை உருவாக்கின. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறாதபோதிலும், அதன் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்தது. இதற்கு அண்ணாமலையின் தாக்கமே காரணம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிட்டன. ஆனால், அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அமைய அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் உருவானது. இதற்கிடையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்து அரசியல் அரங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. முதல்வராக பதவியேற்ற விஜய், மதுக்கடைகள் மூடல், இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளால் கவனம் ஈர்த்துள்ளார். இந்நிலையில், பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை புதிய இளைஞர் மைய இயக்கத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே 13 லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த பொதுத்தேர்தலில் தமிழக அரசியலின் முக்கிய மோதல் விஜய் மற்றும் அண்ணாமலை இடையே அமையுமா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.!
Pa Ranjith : திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்த தினங்களில் நடந்துள்ள சாதி ஆணவக் கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் பதிவிட்டுள்ளார். அவரது X பதிவை இங்கு விரிவாக காணலாம்.
Coimbatore Latest News Updates : காட்டுப்பன்றியை வனவிலங்குகளின் பட்டியலில் இருந்து நீக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் கோரிக்கையின் காரணம் என்ன?, சட்ட பின்னணி என்ன? உள்ளிட்டவற்றை இங்கு காணலாம்.
Savuku Shankar : மாரிதாஸ் விமர்சனம் செய்தார் என்று கைது செய்துள்ளனர். பாசிச அரசு போல் மாறிவிடும் இதனை முதலமைச்சர் விஜய் திருத்தி கொள்ள வேண்டும் என சவுக்கு சங்கர் அறிவுறுத்தி உள்ளார்.
BJP Latest News Updates : நயினார் நாகேந்திரன் எனும் தற்குறி மாநிலத் தலைவராக பொறுப்பு கொடுத்தால் பாஜக தோல்வி அடைந்தது என பாஜக முன்னாள் நிர்வாகிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். இவர்கள் தற்போது அண்ணாமலை இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
Madurai Latest News : கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணமாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்துள்ளது. இதனால், மதுரை மாவட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Bharathiraja R Sentiment : பாரதிராஜா அவர் அறிமுகப்படுத்திய பல நடிகைகளுக்கு R என எழுத்தில் தொடங்கும் வகையில் பெயர் சூட்டியிருக்கிறார். இதன் பின்னணி என்ன?, இதன் சென்டிமெண்ட் என்ன? என்பதை இங்கு காணலாம்.
Madurai Latest News Updates : தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி தருவோம் என்று கூறுகிறார் என்றும் ஆனால் அரசின் நிலைமை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கடும் விமர்சனத்தை பதிவு செய்துள்ளது. இளம் பெண்ணின் உடல் நல மருத்துவ அறிக்கை கோரிய நீதிமன்றத்திற்கு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் அறிக்கை அதிர்ச்சி கொடுத்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.
Madurai Local News : மதுரை மாவட்டத்தில் மொத்தம் 31 அரசு வழக்குரைஞர்களுக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? விண்ணப்பிக்க என்னென்ன தேவை? விண்ணப்பிக்க கடைசி நாள் என்ன? என்பதை இங்கு காணலாம்.
Toddy Sales : தமிழ்நாட்டில் கள் விற்பனையை ஏன் அனுமதிக்கக் கூடாது என்றும் டாஸ்மாக் மூலம் ஈட்டும் வருவாயை கள் விற்பனையிலும் ஈட்டலாமே என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது.
Madurai Power Shutdown : மதுரை மாவட்டத்தில் நாளை (ஜூன் 9) பல்வேறு பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை எங்கெல்லாம் நாளை இந்த 8 மணிநேரம் மின்சாரம் இருக்காது என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
Tamil Nadu News LIVE : தமிழ்நாட்டில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வு; டெல்லியில் இன்று இந்தியா கூட்டணி கூட்டம்; 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட இன்றைய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ்...
Coimbatore Latest News Updates : கோயில்களில் தரிசன வசதிகளை மேம்படுத்தவும், இடைத்தரகர்கள் மூலம் நடைபெறும் முறைகேடுகளை முற்றிலுமாக ஒழிக்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதற்காக இணையவழி டோக்கன் முறை குறித்து ஆலோசனைகள் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் காரையூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் அஸ்வின், அருகிலுள்ள திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தவர். பள்ளி திறந்த நாளில் பள்ளிக்கு சென்றதாக கூறப்பட்ட அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கீழக்காவனூர் கண்மாய் பகுதியில் மாணவன் சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையில், சிறுவனுக்கு 24 வயது அரவிந்த் , 22 வயது கணேசன் மற்றும் அஜய் ஆகியோருடன் மஞ்சுவிரட்டு நிகழ்வுகள் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது. பின்னர் நண்பர்கள் நால்வரும் பள்ளி விடுமுறை நாளில் கண்மாய் பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாக கூறப்படுகிறது. மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அரவிந்த் மற்றும் கணேசன் இணைந்து கூர்மையான ஆயுதத்தால் சிறுவனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயில் பயணிகள் நீண்டகாலமாக சந்தித்து வரும் பாதசாரி வசதி குறைபாடு, பாதுகாப்பற்ற சாலை கடத்தல், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கிடையிலான இணைப்பு சிக்கல்கள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தடையற்ற நடைபாதைகள், நிழற்குடை வசதியுடன் கூடிய நடைபாதைகள், மேம்பால நடைபாதைகள், பாதுகாப்பான சாலை வசதிகள் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட வாகன நிறுத்த மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், பேருந்து நிறுத்தங்களை மெட்ரோ நிலைய நுழைவாயில்களுக்கு அருகில் மாற்றுவது, ஆட்டோ மற்றும் டாக்ஸிகளுக்கான தனிப்பட்ட நிறுத்துமிடங்கள் அமைப்பது போன்ற வசதிகளும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கிண்டி, சைதாப்பேட்டை மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட அதிக பயணிகள் பயன்படுத்தும் முக்கிய நிலையங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளன. இந்த முயற்சி மெட்ரோ நிலையங்களை வெறும் போக்குவரத்து மையங்களாக இல்லாமல், ஒருங்கிணைந்த நகர்ப்புற இயக்க மையங்களாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பொதுப் போக்குவரத்து பயன்பாடு அதிகரித்து, சென்னையின் நகர்ப்புற போக்குவரத்து அமைப்பு மேலும் மேம்பாடு அடையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
TNEB AEE Promotion : 'வரலாற்றில் முதல்முறையாக' 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகவும், வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டதாகவும் தவெக அரசு தெரிவித்துள்ளது. இதனை திமுக கடுமையாக கண்டித்துள்ளது. சில ஆதாரங்களை சமர்பித்து தவெக அரசின் வாதத்தை முற்றிலும் மறுத்துள்ளது.
Registration Department : 'வருகை இல்லா ஆவணப்பதிவு' கட்டாயாமாக்கல் தொடர்பான அறிவிப்பை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் வழிமுறைகள், பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள், வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்களுக்கான நெறிமுறைகளை இங்கு காணலாம்.
பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை புதிய இளைஞர் மைய இயக்கத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே 13 லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.