Actor Dhanush's Pongal Released Superhit Films List : அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், கேப்டன் மில்லர். இந்த படம், பொங்கலை முன்னிட்டு இன்று (ஜனவரி 12) வெளியாகியுள்ளதை தொடர்ந்து, இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்து வருகின்றனர். இந்த படம் மட்டுமன்றி, தனுஷின் பிற சில படங்களும் கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனுஷும்-பொங்கல் ரிலீஸும்..


பெரிய நடிகர்கள், வழக்கமாக பெரிய பண்டிகைகளை குறிவைத்து அவர்களின் படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், நடிகர் தனுஷ் நடிக்கும் படங்களுக்கும், பொங்கல் பண்டிகைக்கும் நல்ல பந்தம் உள்ளது. பொங்கலை முன்னிட்டு வெளியாகும் இவரது படங்கள் பல ஹிட் அடித்து, நல்ல விமர்சனங்களையும் பெற்று தந்துள்ளன. அந்த வகையில், இதுவரை பொங்கலன்று வெளியாகி வெற்றி பெற்ற தனுஷ் படங்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாம் வாங்க. 


தேவதையை கண்டேன்:


2005ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை குறிவைத்து வெளியான படம், தேவதையை கண்டேன். தனுஷ், தனது திரை வாழ்க்கையில் மெல்ல மெல்ல முன்னேறி வந்து கொண்டிருந்த வருடம் அது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்திருப்பார். பாபு என்ற டீ விற்கும் பையனாக நடித்து கலக்கியிருப்பார், தனுஷ். இந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். இப்படம், சூப்பர் ஹிட் அடித்து நல்ல விமர்சனங்களையும் பெற்றது. 



மேலும் படிக்க | Pongal 2024 Movies: ஒரே நாளில் வெளியாகும் 4 முக்கிய தமிழ் படங்கள்! எதை முதலில் பார்க்க போறீங்க?


படிக்காதவன்:


பொல்லாதவன், யாரடி நீ மோகினி என இரண்டு பெரிய ஹிட் படங்களை கொடுத்த பிறகு, தனுஷ் நடித்த படம் படிக்காதவன். இப்படம், 2009ஆம் ஆண்டு பொங்கலை குறிவைத்து ரிலீஸ் செய்யப்பட்டது. தனுஷிற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். படிக்காத, வேலைக்கு போகாத இளைஞன், படித்த பெண்ணை ரவுடிகளை துவம்சம் செய்து விட்டு கரம் பிடிக்கும் கதைதான் படிக்காதவன். இந்த படத்தை சுராஜ் இயக்கியிருந்தார். இந்த படத்துடன் சேர்ந்து விஜய்யின் வில்லு படமும் வெளியானது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் தனுஷின் படமே வெற்றி பெற்றது. 


குட்டி:


மித்ரன் ஆர்.ஜவஹருடன் மூன்றாவது முறை தனுஷ் கைக்கோர்த்த படம், குட்டி. இவர்கள் ஏற்கனவே யாரடி நீ மோகினி மற்றும் உத்தமபுத்திரன் போன்ற படங்களில் பணிபுரிந்திருந்தனர். குட்டி படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஷ்ரேயா நடித்திருந்தார் இந்த படம், கலவையான விமர்சனங்களுடன் தியேட்டரில் 50 நாட்களுக்கும் மேல் ஓடியது. வசூலும் ஓரளவிற்கு சுமாராக இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்படம், இப்போது வரை பலருக்கு பிடித்த ஃபீல் குட் படமாக உள்ளது. 



ஆடுகளம்:


2011ஆம் ஆண்டு பொங்கலை குறிவைத்து ரிலீஸான படம் ஆடுகளம். இந்த படத்தை அவரது ஃபேவரட் இயக்குநரான வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இந்த படம், விஜய் நடித்த‘காவலன்’படத்துடன் சேர்ந்து வெளியானது. அது மட்டுமன்றி, கார்த்தியின் சிறுத்தை படமும் இதனுடன் சேர்த்து ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த மூன்று படங்களுமே வசூலில் சக்கை போடு போட்டது. இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது, தனுஷிற்கு கிடைத்தது. அது மட்டுமன்றி, பல்வேரு விருதுகளையும் இப்படம் தூக்கிச்சென்றது. 


பட்டாஸ்:


துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த படம், பட்டாஸ். இந்த படம், 2020ஆம் ஆண்டு பொங்கலை குறிவைத்து வெளியானது. ரஜினியின் தர்பார் படத்துடன் வெளியான இப்படம், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலையே குவித்தது. இருப்பினும், இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே எழுந்தன. 


கேப்டன் மில்லர்:


இந்த வருட (2024) பொங்கலை குறிவைத்து வெளியாகி உள்ள படம், கேப்டன் மில்லர்.  ‘சாணி காயிதம்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாத்தேஸ்வரன் இயக்கியுள்ள படம் இது. தனுஷ் உடன், பிரியங்கா மோகன், அதிதி பாலன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். 


மேலும் படிக்க | Captain Miller: தனுஷிற்கு அடுத்த தேசிய விருது உறுதியா... பட்டையை கிளப்பும் ட்விட்டர் விமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ