பாவனா வழக்கு: திலீப்புக்கு 2 நாள் போலீஸ் காவல்
![பாவனா வழக்கு: திலீப்புக்கு 2 நாள் போலீஸ் காவல் பாவனா வழக்கு: திலீப்புக்கு 2 நாள் போலீஸ் காவல்](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2017/07/12/116953-dileep-pti.jpg?itok=s1V3q1X8)
நடிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதான நடிகர் திலீப்பை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.
நடிகை பாவனா கடத்தல் மற்றும் பாலியல் வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கேரள நடிகர் சங்கம் மற்றும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
போலீஸாரால் கைது செய்யப்பட்ட திலீப் நேற்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் அவர் ஜாமின் பெற விண்ணப்பித்திருந்த நிலையில், விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால், ஜாமின் தர முடியாதென திலீப்பின் மனு நிராகரிக்கப்பட்டது. அதோடு திலீப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு கோர்ட் அனுமதி வழங்கியது.