கடந்த ஆண்டு வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் வைரலாக பேசப்பட்ட விஷயங்களுள் ஒன்று பிக்பாஸ். இதில், டீன்-ஏஜ் பிரபலங்கள் முதல் ஓல்ட் ஏஜ் பிரபலங்கள் வரை பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். இதில், கவனம் ஈர்த்த போட்டியாளர்களுள் ஒருவராக இருந்தவர் ஜோவிகா விஜயகுமார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோவிகா விஜயகுமார்:


சர்ச்சைக்கு பெயர் போன பிரபலம், வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் பல திருமணங்கள் செய்ததும், இணையதளங்களில் தனக்கு எதிராக பேசுபவர்களை வசைபாடுவதும் அடிக்கடி ட்ரெண்டாவது வழக்கம். இவருக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் ஜோவிகா விஜயகுமார். பிக்பாஸிற்கு வருவதற்கு முன்பு இவரை “வனிதாவின் மகள்” என்று அழைத்து வந்த பலர், இன்று “பிக்பாஸ் ஜோவிகா” என்று அழைக்கின்றனர். அந்த அளவிற்கு பலரது மத்தியில் இவர் பிரபலமாகியிருக்கிறார். 


பிக்பாஸில், “படிப்பு தேவையா இல்லையா” என்ற விவாதம் எழுந்தது. இந்த விவாதம், பிக்பாஸ் வீட்டில் மட்டுமன்றி வெளியிலும் பெரிய விவகாரமாக வெடித்தது. இதனாலேயே பிக்பாஸ் பார்ப்பவர்கள் மட்டுமன்றி, பலர் மத்தியிலும் பிரபலமானார் ஜோவிகா. இவர் சண்டை போடுவதையும் விவாதம் செய்வதையும் பார்த்த மக்கள், அம்மா போலவே மகளும் பயங்கரமாக சண்டை போடுவதாக கருத்துகளை தெரிவித்தனர். 


பார்த்திபனுடன் சேர்ந்து வேலை பார்த்தார்..


தமிழ் திரையுலக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், பல்வேறு படங்களை எழுதி, இயக்கி நடித்து இருக்கிறார். இவர், சமீபத்தில் இயக்கி இருக்கும் படம் டீன்ஸ் (Teenz). இந்த படத்தில், உண்மையாகவே டீன்-ஏஜ் நடிகர்களை வைத்து ஹாரர் ஜானரில் எடுத்திருக்கின்றர். இந்த படத்தில், பார்த்திபனுடன் சேர்ந்து உதவி இயக்குநராக ஜோவிகா வேலை பார்த்திருக்கிறார். இதையடுத்து, இவர் குறித்து பார்த்திபன் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அவர் கூறியது என்ன தெரியுமா? 


மேலும் படிக்க | விஜய்யின் தாயுடன் பிக்பாஸ் வனிதா மற்றும் ஜோவிகா! வைரல் புகைப்படங்கள்..


ஜோவிகா எப்படிப்பட்டவர் தெரியுமா?


ஜோவிகா தன்னுடன் வந்து வேலை பார்க்க வந்த போது பிக்பாஸ் சர்ச்சை மற்றும் வனிதாவின் மகள் குறித்த பிம்பம் அவர் மீது இருந்ததாகவும் இதனால் தான் கூட அவர் குறித்து என்னவோ நினைத்ததாகவும், ஆனால் தான் நினைத்ததற்கு மாறாக அவர் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு வேலை கொடுத்தால் எந்த வித கவனச்சிதறலும் இன்றி, தனக்கான வேலையை அவர் பார்ப்பார் என்றும், இயல்பில் அவர் மிகவும் பயந்த சுபாவம் என்றும் கூறியிருக்கிறார். இது பலருக்கு ஷாக்காக அமைந்திருக்கிரது. இருப்பினும் ஒரு சிலர் இது குறித்து கருத்துகளை தெரிவிக்கையில், அவரது உண்மையான கேரக்டர் பிக்பாஸ் மூலம் வெளிவந்து விட்டதாகவும், நீங்கள் எதுவும் புதிதாக கூற வேண்டாம் என்றும் கூறி வருகின்றனர். 


படிப்பு குறித்து பேசிய ஜோவிகா..!


ஜோவிகா, பள்ளிப்படிப்பை நிறுத்தியவர் என்பதை அவரே பிக்பாஸில் கூறியிருக்கிறார். ஆனால், வெளி மாநிலத்தில் நடிப்பு குறித்த கோர்ஸ் ஒன்றை இவர் முடித்து விட்டுதான் தமிழகத்திற்கு வந்திருக்கிறார். மேலும், ஒருவர் தன் உயிர் போகும் அளவிற்கு படிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை என்றும், இப்படி படிப்பு வராமல் திறமையுடன் இருக்கும் மாணவர்களை பரைசாற்றும் விதமாாகத்தான் தான் இங்கு நிற்பதாகவும் பிக்பாஸில் பேசினார். அப்போது இவருக்கு எதிராக கருத்து பேசிய விசித்ராவிற்கு ஆதரவு பெருகியது. 


மேலும் படிக்க | பிக்பாஸ் ஜோவிகா எந்த வகுப்பு வரை படித்துள்ளார்..? முழு விவரம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ