பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன ஜோவிகா! இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு?

BB 7 Jovika Vijayakumar Salary: பிக்பாஸ் 7 போட்டியில் இருந்து ஜோவிகா விஜயகுமார் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த வீட்டில் இருந்த போது வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

பரபரப்பாக நடைப்பெற்று வரும் பிக்பாஸ் 7 போட்டியில் ஒவ்வொரு வாரமும் முக்கிய போட்டியாளர்கள் பலர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்த வாரம் ஜோவிகா விஜயகுமார் எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த வீட்டில் இருந்த போது வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

1 /7

பிக்பாஸ் 7 போட்டியில் இருந்து வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் அந்த வீட்டில் 60 நாட்களுக்கும் மேல் இருந்துள்ளார். இவர் மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

2 /7

நடிகையும் டிஜிட்டல் பிரபலமாகவும் விளங்கும் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் பிக்பாஸ் போட்டியில் முக்கிய போட்டியாளராக நுழைந்தார். 

3 /7

ஜோவிகா, போட்டியின் ஆரம்ப நாட்களில் சிங்கிளாக தனித்து நின்று விளையாடினார். இவர், விசித்ராவிடம் படிப்பு குறித்து பேசிய எபிசோட் பெரும் வைரலானது. 

4 /7

பிரதீப் குமாரின் ரெட் கார்ட் விவகாரத்தில் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கூறியவர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்களின் லிஸ்டில் ஜோவிகாவும் இணைந்துள்ளார். 

5 /7

ஜோவிகா, கடந்த சில நாட்களாக சிலருடன் சேர்ந்து விளையாடுவதாக ரசிகர்களிடையே கருத்துகள் பரவியது. இதையடுத்து, ஆரம்பத்தில் இருந்த மக்களின் ஆதரவு அவருக்கு அப்படியே படிப்படியாக குறைந்தது. 

6 /7

ஜோவிகா கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் மேலாக பிக்பாஸில் இருக்கிறார். ஒரு நாளைக்கு இவருக்கு 18,000 வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

7 /7

ஜோவிகாவிற்கு 10 லட்சத்திற்கும் மேலாக சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.