மழை நிவாரண நிதிக்கு பெரிய தொகையை கொடுத்த ஹரிஷ் கல்யாண்! எவ்வளவு தெரியுமா?
Harish Kalyan: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சர் நிவாரண தொகைக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் பெரிய தொகை ஒன்றை வழங்கியுள்ளார்.
மிக்ஜாம் புயல் சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. மீட்பு பணிகளும், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணிகளும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பெரிய தொகையை வழங்கியுள்ளார்.
ஹரிஷ் கல்யாண் உதவி:
கோலிவுட் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இரண்டு நாட்களுக்கு முன்னர் மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் பல மழையினால் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, ரூ.1 லட்ச ரூபாயினை நன்கொடையாக வழங்கியுள்ளார். இவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து அவர் டிவிட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “கை கோர்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.
மழையில் மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..
மிக்ஜாம் புயலின் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது. சென்னையில் தாம்பரம், வேளச்சேரி, மைலாப்பூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியிருந்தது. காரப்பாக்கத்தில் தங்கியிருந்த நடிகர் விஷ்ணு விஷால், அவரது மனைவி பாலிவுட் நடிகர் அமீர் கான் ஆகியோர் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டனர். இதையடுத்து அவர்களை மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்டனர்.
நடிகர் அஜித்குமார் அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அவர்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய உதவிகளை செய்து கொடுத்ததாக விஷ்ணு விஷால் பதிவிட்டிருக்கிறார்.
அதே போல, நடிகைகள் அதிதி பாலன் மற்றும் கீர்த்தி பாண்டியனும் மழையினால் மைலாப்பூரில் 48 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லை என்றும், அரசாங்கம் என்ன செய்கிறது என்றும் கேள்வியெழுப்பி காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.
மேலும் படிக்க | பிக்பாஸில் இருந்து எவிக்ட் ஆன ஜோவிகா! இதுவரை வாங்கிய சம்பளம் எவ்வளவு?
கோபமடைந்த விஷால்..
நடிகர் விஷால், சென்னை மேயர் ப்ரியாவிற்காக ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில், அண்ணா நகரில் உள்ள தனது வீட்டில் தண்ணீர் புகுந்து விட்டதாகவும் அண்ணா நகருக்கே இந்த நிலை என்றால் பிற பகுதிகளை நினைத்து பார்க்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும், அந்தந்த தொகுதிக்களின் எம்.எல்.ஏக்கள் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக வந்து உதவி செய்ய வேண்டும் என்றும் கூறினார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, திமுக கட்சியை மக்கள் வசைபாட தொடங்கினர். மழை நீர் வடிகாலுக்காக ஒதுக்கிய தொகை எங்கே என்றும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
மேலும் படிக்க | நல்ல வரவேற்பினை பெற்ற ஹரிஷ் கல்யாணின் படம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ