ஜனகராஜ் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்த ஓர் திரைப்பட நடிகராவார். 100 திரைப்படங்களுக்கும் மேலாக நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி செந்தில் ஜோடிக்கு போட்டியாக இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு பன்முக வேடங்கள் புரியும் கலைஞர் என்று நடிகர் ஜனகராஜை (Janagaraj) சொல்லலாம். 1971 ஆண்டு முதலே திரைப்படங்களில் நடிக்க முயன்று வந்தார். 1972 - 1977 ஆண்டுகளில் இயக்குனர் கைலாசம் கே.பாலச்சந்தர் அவருக்கு தமது இரண்டாம் தர திரைப்படங்களில் பல சிறு வேடங்களை அளித்து வந்தார். 1977ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக வசனம் உள்ள வேடமொன்றில் "செவப்பு வில்லு" என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 70கள் முழுவதுமே இத்தகைய சிறு வேடங்களில் நடித்து வந்தார்.


1980கள் அவருக்கு சிறப்பான ஆண்டுகளாக அமைந்தன. 1982ஆம் ஆண்டு வெளியான பார்வை (1982), பின் தொடர்ந்த அபூர்வ பேரர்கள் (1983), மீண்டும் கோகிலா (1983), சிந்து பைரவி (1985), ராஜாதி ராஜா (1989), அபூர்வ சகோதரர்கள் (1989), அக்னி நட்சத்திரம் (1989), மற்றும் புதுப் புது அர்த்தங்கள் (1989), அவரது வெற்றிக்குப் படிகளாக அமைந்தன.


90களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் அவர் நடித்த கிங் (2002), ஆயுத எழுத்து (2004), மற்றும் எம். குமரன் S/O மகாலட்சுமி (2004) ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது 66 வயதான ஜனகராஜ் தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில்நடித்தார். பல படங்களில் நடித்து வந்த ஜனகராஜ் அண்மைக்காலமாக அமெரிக்காவில் பிள்ளைகளுடன் வசித்து வந்ததாக கூறப்பட்டது. 


இந்நிலையில் தற்போது அவர் ட்விட்டரில் கணக்கு தொடங்கியிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. நடிகர் ஜனகராஜின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் ட்விட்டர் கணக்கு தொடங்கி இணைந்துள்ளதாகவும் அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும் பலருக்கும் இது உண்மையில் ஜனகராஜின் ட்விட்டர் ஐடி தானா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 


 



 


இந்த சங்கத்தை போக்கும் வகையில் நடிகர் ஜனகராஜ் பிறந்த நாளில் ட்விட்டர் கணக்கு தொடங்கியதாக அறிவித்த இந்த ட்வீட்டை பகிர்ந்த ஷாந்தனு அவருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.


 



 


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR