என்னை வழிநடத்தும் குருசாமி ஜெயராம் - ஜெயம் ரவி நெகிழ்ச்சி ட்வீட்
ஜெயராமுடன் சபரிமலைக்கு சென்ற ஜெயம் ரவி தன்னை வழிநடத்தும் குருசாமி ஜெயராம் என நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என பலர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்காக படக்குழு பல்வேறு நகரங்களுக்கு சென்று செய்தியாளர்களை சந்தித்துவருகிறது.
படத்தில் ஜெயம் ரவி அருண்மொழிச் சோழனாகவும், ஜெயராம் ஆழ்வார்க்கடியான் நம்பியாகவும் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் ஜெயம் ரவியும், ஜெயராமும் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், “பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராமுடன் பம்பையில் ” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | சூடானது சூடானது யுத்தம் - பொன்னியின் செல்வனின் புதிய லிரிக் வீடியோ
முன்னதாக, பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியிருப்பதால் படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மே அல்லது ஜூனில் வெளியாகுமென்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்திருக்கிறார். அதேபோல் நேற்று படத்தில் இடம்பெற்றிருக்கும் தேவராளன் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ