சென்னையில் நிவாரணப்பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த வாரம் முதலே கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியிருந்தார். 


சென்னையின் பல பகுதிகளில் விடாமல் அதிகாலை முதல் மழை பெய்கிறது. பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடரும் மழையால் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 


தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவும் மழை நீடித்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. 


மேலும் சில இடங்களில் சாலைகளிலும் மரம் முறிந்து கிடப்பதினால் கடுமையான நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைக் கருத்தில் கொண்டு, காவலர்கள் மழை மீட்புப் பணியில் ஈடுபடுமாறு காவல் ஆணையர் உத்தரவிட்டார்.


இந்த உத்தரவையடுத்து காவல்துறையினர் போக்குவரத்துக்கு இடையூறாக தேங்கி நின்ற மழை நீரை அகற்றினர். இதேபோல் பல்வேறு இடங்களில் சாலையில் விழுந்து கிடந்த மரங்களையும் போலீஸார் வெட்டி அகற்றினர்.


இந்நிலையில், இதற்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் கூறியது:-


நல்ல குடிமகன் சீருடை அணிந்தாலும் அணியாவிட்டாலும் பிரகாசிப்பார்கள். காவல் பணியுடன் மீட்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு நன்றி. காவலர்களைப் போல் பணியாற்ற தமிழர்கள் முன்வரவேண்டும். இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை.


 



 


 



 


இவ்வாறு பதிவிட்டுள்ளார்.