Actor karthi கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள சுல்தான் திரைப்பட டிரெய்லர் வெளியாகி வைரல்
ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ரஷ்மிகா நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் சுல்தான்.
சென்னை: ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ரஷ்மிகா நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் சுல்தான்.
ஏற்கனவே அறிவித்தவாறு இன்று சுல்தான் திரைப்பட டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். கதாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழ்ப் படத்தில் ராஷ்மிகா நாயகியாக அறிமுகமாகிறார். திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப் போனது.
ALSO READ | நடிகர் கார்த்தியின் சுல்தான்....வெளியாகி வைரலாகும் பர்ஸ்ட் லுக்
திரைப்படத்தை OTT தளங்களில் வெளியிடுவதாக தகவல்கள் வந்த நிலையில், படக்குழு ஏப்ரல் 2ம் தேதி படத்தை வெள்ளித்திரையில் பார்க்கலாம் என அறிவித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தனர்.
சுல்தான் திரைப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஜெய் சுல்தான்', 'யாரையும் இவளோ அழகா பார்க்கல' , மற்றும் 'எப்படி இருந்த நாங்க' என்ற அந்த மூன்று பாடல்களும் வைரலாகி வருகிறது.
ALSO READ | Happy Birthday கார்த்திக் சுப்புராஜ் என வாழ்த்துமழை பொழியும் வெள்ளித்திரை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR