நடிகர் கார்த்தியின் சுல்தான்....வெளியாகி வைரலாகும் பர்ஸ்ட் லுக்

கார்த்தியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் இங்கே.

Last Updated : Oct 26, 2020, 04:41 PM IST
நடிகர் கார்த்தியின் சுல்தான்....வெளியாகி வைரலாகும் பர்ஸ்ட் லுக்

கார்த்தியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுல்தான் (Sulthan) படத்தின் பர்ஸ்ட் லுக் இங்கே. ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி (Karthi) நடித்துள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 

இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவர் தமிழ்ப் படத்தில் நாயகியாக நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது. கார்த்தி, ராஷ்மிகா மந்தனா தவிர்த்து வேறு யாரெல்லாம் நடித்து வருகிறார்கள் என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

 

ALSO READ | கைதி படத்தில் தான் பணிபுரிந்த அனுபவத்தை நினைவு கூர்ந்த இந்த நடிகர்

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கார்த்தி கையில் சாட்டையுடன் மாஸான லுக்கில் இருக்கிறார். இப்படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பொங்கல் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

 

 

தற்போது இதன் படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் 'சுல்தான்' படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்டப் பணிகளைப் படக்குழு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

ALSO READ | காஜல் அகர்வாலுக்கு சரியான ஜோடியாக தோற்றமளித்த இந்த நட்சத்திரங்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News