நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டவர் நடிகர் மன்சூர் அலிகான் (Mansoor Ali Khan). இவர் தொண்டாமுத்தூர் தொகுதியில் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
ALSO READ | குறை தீர்க்க கிளம்பிய மன்சூர் அலி கான் களத்திலிருந்து விலகிய காரணம் என்ன?
இந்நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக்கல் பிரச்சினைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட் உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று, அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார்.
முன்னதாக நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என பபரபரப்பு பேட்டியை கொடுத்ததால், தடுப்பூசி குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இது தவிர கொரோனா தடுப்பூசி குறித்து பொய்யான தகவலை பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வடபழனி காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR