இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி, 2024 அன்று திரைக்கு வருகிறது. இந்த திரைப்படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக தற்போது துவங்கியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் ஒரு பகுதியாக கடந்த மே 22 ஆம் தேதி 2024 அன்று, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட விழா ஒன்றில், படத்திற்காக மஹேந்திரா கம்பெனி மூலம் பிரத்தியேகமாக உருவாக்கிய, கல்கி 2898 கி.பி (Kalki 2898 AD) திரைப்படத்தில் பயன்படுத்தப்படும் எதிர்கால வாகனமான 'புஜ்ஜி'யை அறிமுகப்படுத்தினர். பைரவா என்ற பிரபாஸின் சிறந்த நண்பனாக படம் முழுவதும் அவருடன் ஒரு எதிர்கால வாகனம் வருகிறது. 



இந்த அற்புதமான படைப்பான, 'புஜ்ஜி' யை (Bujji) அறிமுகப்படுத்திய நடிகர் பிரபாஸ் அதனை ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி இருந்தார்.


மேலும் படிக்க | OTT Releases : ஓடிடியில் புதிதாக வெளியாகும் படங்களும் தொடர்களும்! எந்த தளத்தில், எதை பார்க்கலாம்? 


இதனைத் தொடர்ந்து, தற்போது இந்த வாகனம் சென்னை மஹேந்திரா சிட்டிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது, மேலும் இந்த வாகனம் பொதுமக்கள் முன்னிலையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பைரவாவாக வரும் பிரபாஸும், புஜ்ஜியும் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கிறார்கள். புஜ்ஜி டீசர் வைரலாகி, வரவேற்பை பெற்ற நிலையில், இந்த வாகனத்தைக் காண மக்கள் அலையெனத் திரண்டனர்.


கற்பனையிலும் நினைத்து பார்த்திராத வடிவத்தில், மூன்று சக்கரங்களுடன், நவீன வசதிகளுடன், பார்த்தவுடன் எதிர்காலத்தை கண்முன் கொண்டு வரும் வகையிலான புஜ்ஜி வாகனம், பார்த்தவர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.



ஆயிரக்கணக்கில் கூடி இவ்வாகனத்தை பார்வையிட்ட மக்கள், பட டீசரில் நடிகர் பிரபாஸ் அமர்ந்து பயணித்த இடத்தில் அமர்ந்து, ஆவலுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.


அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘கல்கி 2898 AD’ படத்தை நாக் அஷ்வின் இயக்கியுள்ளார், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ளது. ஒரு பன்மொழி படைப்பாக, புராணக்கதைகளால் ஈர்க்கப்பட்ட, எதிர்காலத்தில் நடக்கும் அறிவியல் புனைகதை வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது.


புஜ்ஜியை அறிமுகப்படுத்தி வெளியான வீடியோ இதோ:



கல்கி 2898 ஏடி ஓடிடி:
இந்தப் படத்தின் இந்தி ஓடிடி உரிமம் மட்டுமே 100 கோடி ரூபாய்களுக்கு விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள சூழலில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த உரிமையை வாங்கியுள்ளதாகவும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் நிறுவனம் 150 கோடி ரூபாய்களுக்கு ஒடிடி உரிமையை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Sivakarthikeyan : சிவகார்த்திகேயனுக்கு 3வது குழந்தை? வைரலாகும் பாேட்டோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ