விஷாலின் திறமையை நிரூபிக்க ‘துப்பறிவாளன் 2’ ஒரு நல்ல வாய்ப்பாக அமையுமா?
நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படம் `துப்பறிவாளன் 2`. இத்திரைப்படம் விஷாலின் திறமையினை வெளிப்படுத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படம் 'துப்பறிவாளன் 2'. இத்திரைப்படம் விஷாலின் திறமையினை வெளிப்படுத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர்கள் பிரசன்னா மற்றும் விஷால் நடிப்பில் உருவாகி கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பறிவாளன். இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை துவங்க இயக்குநர் மிஷ்கின் முடிவு செய்தார். புதுமுக நாயகி அஷ்யா, ரகுமான், கெளதமி, பிரசன்னா உள்ளிட்ட பலர் கொண்டு படத்தின் வேலை நடைப்பெற்று வந்தது. இத்திரைப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, சென்னை திரும்பியது படக்குழுவுடன் இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தமானார்.
இதனிடையே படத்தின் பொருட்செலவு, படப்பிடிப்பு சமயத்தில் நடந்து கொண்ட விதம் உள்ளிட்ட காரணங்களால் விஷால் - மிஷ்கின் இருவருக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் பொறுப்பிலிருந்து மிஷ்கின் விலகினார், பின்னர் வேறு வழியின்றி இயக்குநர் பொறுப்பையும் விஷால் ஏற்றார்.
படத்தின் பணிகளை முடிக்க இயக்குநராக அவதாரம் ஏற்ற விஷால் இந்த படத்தை தனது முதல் படமாக (இயக்குநராக) அறிவித்து, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரினை வெளியிட்டார்.
இந்நிலையில், படத்தில் விஷாலின் உதவியாளராக நடிக்கும் பிரசன்னா, துப்பரிவாலன் 2 பற்றி ஒரு ட்விட்டர் கேள்விக்கு பதில் அளிக்கையில்., விஷாலின் திறமையினை வெளிப்படுத்த துப்பரிவாலன் 2 ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாகர ரசிகர் ஒருவர் "இயக்குநர் மிஷ்கின் இல்லாமல் துப்பரிவாலன் 2 ஒரு மாற்றத்தை அளிக்குமா?" என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் அளத்த பிரசன்னா "அவர் இல்லாதது துரதிர்ஷ்டவசமான விஷயம், அதை என்னுகையில் வருந்துகிறேன். விஷால் திறமையானவர், அவர் நிரூபிக்க வேண்டியது நிறைய உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, மிஷ்கின், பிரசன்னா மற்றும் விஷால் ஆகியோருடன் மற்ற அணியினரும் படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்றனர். விஷாலின் அறிக்கையின்படி, மிஷ்கின் அதிக செலவு செய்ததாகவும், அதிக பணம் கோருவதாகவும் கூறினார். மேலும் மிஷ்கின் லண்டன் அட்டவணையை சரியாக திட்டமிடவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார், இதன் விளைவாக நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டை மீறியது எனவும் இயக்குநர் மீது குற்றம்சாட்டினார்.