பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிள்ளது என்று மோடி கூறியிருந்தார்.
அதன்படி, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவிலிருந்து செல்லாது. நவம்பர் 9-ம் தேதி முதல், இந்த நோட்டுகள் வெறும் காகிதங்களாகவே கருதப்படும் என்று தெரிவித்தார்.இதற்கு பதிலாக புதிய 500 ரூபாய், 2,000 ரூபாய் தாள்கள் வெளியாகும் என்றும் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோடியின் இந்த அறிவிப்புக்கு பிரபல நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து இருவரும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.