கோலிவுட்டின் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானவர் சதீஷ். தமிழ் சினிமாவின் அனைத்து சிறந்த நட்சத்திரங்களுடனும் இவர் நடித்துள்ளார். மேலும் கத்தி, எதிர்நீச்சல் போன்ற பல சூப்பர்ஹிட் திரைப்படங்களின் ஒரு பகுதியாகவும் நடித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையுலகின் பிசியான இருப்பவர் சதீஷ். அவருக்கும், சிக்ஸர் பட இயக்குநர் சாச்சியின் தங்கை சிந்துவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. இது பெரியவர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம் ஆகும். சாச்சி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான சிக்ஸர் படத்தில் சதீஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


ALSO READ | தனது உடலமைப்பால் ரசிகர்களை ஈர்த்த இந்த டிரெண்டிங் காமெடி நடிகர்


இந்நிலையில் சதீஷின் மனைவி கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் அவர் இன்று பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தான் அப்பா ஆன விஷயத்தை ட்விட்டரில் தெரிவித்து அனைவரின் ஆசியும் தேவை என்று  சதீஷ் கூறியுள்ளார்.  இந்த ட்வீட்டுக்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


 




சதீஷ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அண்ணாத்த படப்பிடிப்பை தற்போதைக்கு துவங்கும் திட்டத்தை கைவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 


ALSO READ | ரஜினி நடிக்கும் அண்ணாத்த.. அடுத்த அட்டகாசமான Update என்ன தெரியுமா..?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR