கோவை பேரூர் பகுதியில் உள்ள சேரன் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சதீஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது பேசிய அவர் கூறியதாவது, வித்தைக்காரன் படப்பிடிப்பு கோவையில் நடந்ததது எனவும் இரு வாரங்களுக்கு பிறகு கோவைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவத்தார்.  மேலும் கல்லூரி கரும்பலகையை பார்க்கும்போது "யார் பேசினார்கள் எழுதி வையுங்கள் என்று சொன்னால் அதில் என் பெயர் தான் இருக்கும், கரும்பலகையை பார்த்தால் இப்பொழுதும் பயம் வரும் எனவும், அவ்வப்போது கனவில் தேர்வு எழுவதுவது போல் தோன்றுவதால்அதிர்ச்சியில் எழுந்து அமர்வேன்" எனவும் தெரிவித்தார். படிக்கும்போது எந்த விதமான தவறான விசயத்திலும் ஈடுபட வேண்டாம், மது, புகைபழக்கம் உள்ளிட்டவை உடல்நலத்தை கெடுப்பதோடு, கல்வியையும் கெடுக்கும் எனவும் ஆசிரியர்களிடம் மரியாதை நடந்து கொள்ள வேண்டும், தாங்கள் படிக்கும்போது ஆசியருக்கு பயம்படுவோம், இப்போது உள்வாடாக மாறிவிட்டது எனவும் நிறைய வீடியோக்களில் மாணவர்கள் தகாத வார்த்தைகள் பேசுவதை பார்க்கும் போது வேதனையளிக்கிறது எனவும் தெரிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கமல் Vs மாரி செல்வராஜ்! அடுத்த கட்டத்துக்கு சென்ற மோதல்! முழு விவரம்!



தொடர்ந்து பேசிய நடிகர் சதீஸ், நாய்சேகர் படத்திற்கு பிறகு சட்டம் என் கையில் என்ற படத்தை முடித்துள்ளோம் ஒரு நல்ல திரில்லர் படமாக இருக்கும் என தெரிவித்தார்.  லோகேஸ் கனகராஜின் இணை இயக்குநர் வெங்கி இயக்கும் வித்தைக்காரன் படம் அடுத்த வெளியீடாக இருக்கும் எனவும் அடுத்த வாரம்  பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது என தெரிவித்தார்.  ஓடிடி மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கிறது எனவும் நல்ல தொழிலாக இருக்கிறது எனவும் இருந்தாலும் தியேட்டர் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கும் எனவும் ஹிந்தி மென்பொருள் உருவாக்கிருப்பது கொரோனோவிற்கு நல்ல வளர்ச்சியாக பார்க்கபடுகிறது எனவும், தான் சிகரெட் பிடிக்க மாட்டேன் எனவும், படத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் சிகிரெட் தொடர்பான காட்சிகளில் நடிகர்கள் நடிக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். திரைபட்டங்களில் உள்ள விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் எனக்கூறிய சதீஸ்,சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் எனவும், விஜய்யுடன் புகைப்படம் எடுக்கவேண்டும் என படித்தால் நல்லது தானே என தெரிவித்ததோடு இன்னும் விஜய் மாணவர்களுக்கு உதவும் இதுபோன்று திட்டங்களை செய்வார் என தெரிவித்தார்.


மாமன்னன் இசைவெளியீட்டு விழா சர்ச்சை தொடர்பான என்ற கேள்விக்கு, ஜெயம் ரவி கூறியது போல் தானும் தூங்கிவிட்டேன் என கூறியதோடு, கருத்து பகிரபட்டத்தை தான் ஒரு பார்வையாளனாக பார்ப்பதாகவும், தேவர் மகன் திரைப்படம் தனக்கு மிகவும் படித்த படம் , இறுதியில் வரும் வன்முறை வேண்டாம், சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்கவையுங்கடா என்ற நல்ல கருத்தைமட்டும் தான் எடுத்துக்கொள்வதாகவும், மாரி்செல்வராஜ் எழுதிய கடிததை படிக்கவில்லை எனவும் தெரிவித்தார். தொடர்ந்து தான் அணிந்திருக்கும் டீ-சர்ட் அன்பளிப்பாக வந்தாகவும், டீ சர்ட்டு நான் அவ்வளவு செலவு செய்யமாட்டேன் எனவும் இது உண்மை என தெரியவில்லை, துவத்தால் தெரியும் எனவும் திருப்பூரில் ஆயிரம் ரூபாய்க்கு கூட இதே மாதிரி கிடைக்கிறது. துவைத்து பார்த்தால் தான் எனக்கே தெரியும் என சிரித்தபடியே இவ்வாறு நடிகர் சதீஷ் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Chef Damu: சமையல் திருவிழா நடத்தும் ‘குக் வித் கோமாளி’ புகழ் செஃப் தாமு..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ