பீஸ்ட் படத்தை முடித்த கையுடன் தளபதி 66 திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருகிறார் விஜய். இப்படத்தின் சூட்டிங் ஏற்கனவே சென்னையில் தொடங்கி, சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் அவர் மறுப்பு தெரிவித்துள்ளாராம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் - ராஷ்மிகா மந்தனா


தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் உட்சத்தில் இருக்கும் அவர் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தளபதி 66 படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.




சரத்குமார் ரோல் என்ன?


தளபதி 66 திரைப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கிறார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற பட பூஜையில் அவர் கலந்து கொண்டார். இதனையடுத்து அவர் என்ன ரோலில் நடிக்கிறார் என்பது இப்போது வரை சஸ்பென்ஸாக இருக்கிறது. முதல் கட்ட தகவல்களின் அடிப்படையில் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | மும்பைக்கு வந்த வில் ஸ்மித்? காரணம் இதுதான்!


அண்ணன் ரோலில் யார்?


விஜய்க்கு அண்ணனாக நடிக்க சரியான ஒருவரை படக்குழு தேடிக் கொண்டிருக்கிறதாம். அந்த ரோலில் 80 களில் முக்கிய கதாநாயகனாக இருந்த நடிகர் மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், ஹீரோக்களுக்கு அப்பா மற்றும் அண்ணன் கதாப்பாத்திரங்களில் அவர் நடிக்க விருப்பம் இல்லை எனக் கூறிவிட்டாராம்


களமிறங்கும் சாக்லெட் பாய்


இதனால், விஜய்யின் அண்ணன் கதாப்பாத்திரத்தில் நடிகர் ஷ்யாம் நடிக்க இருக்கிறாராம். கதை மற்றும் கதாப்பாத்திரம் குறித்து கேட்ட அவர் உடனே ஒகே சொல்லிவிட்டதாக தெரிகிறது. இரு அண்ணன் ரோலில் ஒருவராக நடிக்கிறார் ஷியாம். மற்றொருவர் கதாப்பாத்திரத்துக்கு பிரபல நடிகரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான குஷி படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்தார் ஷியாம். 



ஹைதராபாத்தில் சூட்டிங்


இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவர் ஏற்கனவே கில்லி படத்தில் வில்லனாக விஜய்யுடன் நடித்திருந்தார். மீண்டும் தளபதி 66 படத்தில் இணைந்துள்ளார். பூஜை போட்டப்பிறகு சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் அடுத்த கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | சினிமாவுக்கு வராமல் போயிருந்தால்?- ஜி.வி. பிரகாஷ் கலகல


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR