குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகன், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவில் வலம் வருபவர் சிம்பு. சில காலமாக அவர் நடித்த படங்கள் பல பிரச்னைகளை சந்திக்க அவரும் ஆன்மிகம் என தனது பாதையை மாற்ற கோலிவுட்டில் இருந்த தனக்கான இடத்தை இழந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் தீவிரமாக உழைத்து உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும் உடல் எடையை குறைத்து பழைய எனர்ஜியுடன் சிம்புவை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.



இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்து கோலிவுட்டில் சிம்புவுக்கு ரீ எண்ட்ரி கொடுத்தது. மாநாடு வெற்றிக்கு பிறகு பத்து தல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துவருகிறார்.  நடிப்பது மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர், மற்ற படங்களுக்கு பாடுவது என சிம்பு மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார்.


மேலும் படிக்க |20 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்.!


இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவருக்கு 8 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கின்றனர். கமலுக்கு 1.6 மில்லியன் ஃபாலோயர்ஸும், தனுஷுக்கு 4.2 மில்லியன் ஃபாலோயர்ஸும், சூர்யாவுக்கு 4.3 மில்லியன்ஸ் ஃபாலோயர்ஸும், விஜய் சேதுபதிக்கு 5 மில்லியன் ஃபாலோயர்ஸும் உள்ளனர்.


தற்போது சிம்புவுக்கு 8 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருப்பதன் மூலம் தமிழ் சினிமா நடிகர்களில் அதிக ஃபாலோயர்ஸை வைத்திருக்கும் நடிகர் என்ற பெருமையை சிம்பு பெற்றிருக்கிறார். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR