விலங்குகளை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்!
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2,452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரிய பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று.
சென்னை : சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2,452 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பெரிய பூங்காக்களில் இப்பூங்காவும் ஒன்று.
இப்பூங்கா 1855-ல் தோற்றுவிக்கப்பட்ட, 'இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா'வாகும். இங்கு 170-க்கும் மேற்பட்ட பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன உள்ளன. பார்வையாளராக வந்து விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இங்கு உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக இப்பூங்கா, 'விலங்கு தத்தெடுப்பு' என்கிற ஒரு புது திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் விலங்குகளை தத்தெடுப்பவர் எந்த விலங்கின் மீது ஆர்வம் உள்ளதோ அதற்குரிய உணவு மற்றும் பராமரிப்பு செலவினை அன்பளிப்பாக அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்றவாறு வரி விலக்குக்கான ரசீது மற்றும் பூங்காவினை இலவசமாக சுற்றிப்பார்ப்பது போன்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில்,தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசியர் என பல துறைகளிலும் பணியாற்றி வரும் சிவகார்த்திகேயன் வண்டலூரில் உயிரியல் பூங்காவிலுள்ள 'விஷ்ணு' என்ற ஆண் சிங்கத்தையும், 'பிரகுர்த்தி' என்ற பெண் யானையையும் 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். ஏற்கனவே அவர் 'அனு' என்ற வெள்ளைப்புலியை 2018-ல் இருந்து 2020-ம் ஆண்டு வரை தத்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ கவுண்டமணியை சந்தித்த சிவகார்த்திகேயன்; இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR