கவுண்டமணியை சந்தித்த சிவகார்த்திகேயன்; இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை அவரது இல்லத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2021, 02:09 PM IST
கவுண்டமணியை சந்தித்த சிவகார்த்திகேயன்; இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் title=

தமிழ் சினிமாவின் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்து இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நகைச்சுவை நடிகர் பட்டியலில் இருப்பவர் கவுண்டமணி. பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு.

துவக்கக் காலங்களில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தவர் நடிகர் கவுண்டமணி (Goundamani), பின்னர் செந்திலுடன் இணைந்து நகைச்சுவை காட்சிகளை அமைத்தபின்னர் இருவரும் பெரும் வெற்றி கண்டனர். இரண்டு தலைமுறை இரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், உரையாடல்களும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.

ALSO READ | தெலுங்கு படத்தில் சிவகார்த்திகேயன்!

இந்த இணையின் மிகப் புகழ்பெற்ற நகைச்சுவை கரகாட்டக்காரனில் வந்த வாழைப்பழம் வாங்குதல் குறித்ததாகும். சூரியன் திரைப்படத்தில் அவர் கூறிய அரசியலில்லே இதெல்லாம் சகஜமப்பா என்ற சொல்லாடலும் மிகவும் பரவலாக அறியப்பட்டது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வாய்மை. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்துக்கு பின்னர் வேற படங்கள் எதிலும் கவுண்டமணி நடிக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan), நகைச்சுவை நடிகர் கவுண்டமணியை அவரது இல்லத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், “இது மகிழ்ச்சியான, சிறப்பான தருணம், இந்த நாள் என்றென்றும் நினைவில் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் படம் வெளியாக உள்ளது. இந்தப்படம் நேரடியாக ஓடிடியில் ரீலிசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படமும் வெளியீட்டிற்காக காத்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | சிக்கலில் டான் படம்; சிவகார்த்திகேயன் படக்குழுவிற்கு அபராதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News