Sivakarthikeyan New Movie : 15 வருடங்களுக்கு முன்னர், பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளராக இருந்தவர், சிவகார்த்திகேயன். இன்று, முன்னணி நடிகர்களுள் ஒருவராக வளர்ந்து விட்டார். இவர் அடுத்து நடிக்கும் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னணி நடிகராக வளர்ந்த சிவா!


கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கவர்ந்தார். இதையடுத்து, தனுஷ் உடன் 3 படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்த அவருக்கு மெரினா படம் மூலம் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை கப்பென பிடித்துக்கொண்ட இவர், தொடர்ந்து திரைத்துறையில் வளர்ச்சி பெற்று, இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார்.


நடிப்பது மட்டுமல்லாது, பல திரைப்படங்களில் பாடல்களும் பாடி, பாடல்களை எழுதியும் வருகிறார். குறிப்பாக, பீஸ்ட் படத்தில் இவர் எழுதி இடம் பெற்றிருந்த ‘ஹலமதி ஹபிபோ’ பாடல் பெரிய ஹிட் அடித்தது. 


டான் பட இயக்குநருடன் மீண்டும்  இணைகிறார்!


சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம், ‘டான்’. இந்த படத்தை, புதுமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, இயக்கியிருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக கொஞ்சம் அடி வாங்கினாலும் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாகபேசப்பட்டது. இவர்கள், டான் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த தகவலும் தற்போது வெளியாக இருக்கிறது. 


மேலும் படிக்க | இந்தியன் 2 பட அப்டேட்டுகளை அள்ளி வீசிய நடிகர் கமல்! CSK vs RCB லைவில் சுவாரஸ்யம்..


விஜய் பட நாயகி..


கடந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த விஜய் படம், வாரிசு. இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடப்பள்ளி இயக்கியிருந்தார். தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர், தற்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. 



அமரன் படத்தில் சிவகார்த்திகேயன்..


நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது அமரன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். புல்வாமா தாக்குதலை வைத்தும், அதில் இந்திய ராணுவத்தினருக்கு தலைமை தாங்கியவராக இருந்த மேஜர் முகுந்தின் வாழ்க்கையை வைத்தும் இப்படம் உருவாகி வருகிறது. இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் இயக்க இருக்கிறது. இப்படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில், சாய் பல்லவி நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ஏ.ஆர்.ரஹ்மானின் இளையமகள் செய்த சாதனை! இசைத்துறையில் அல்ல-‘இந்த’ விஷயத்தில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ