தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நாவலை பலரும் படமாக்க முயன்று தோல்வியுற்று போன நிலையில் இறுதியாக அதனை மணிரத்தினம் சாதித்து இருக்கிறார்.  இதுவரை எழுத்து வடிவமாக மட்டுமே பொன்னியின் செல்வன் நாவலின் கதையை படித்து, காட்சிகளை கண்ணார காண வேண்டும் என்கிற ஆசையோடு இருந்த பலருக்கும் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படம் அந்த ஆசையை நிறைவேற்றியது.  பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அதிகளவு வரவேற்பு கிடைக்கவில்லையென்றாலும், இப்படத்தை பார்த்து ரசிக்க திரையரங்குகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைகடலென திரண்டு போகின்றது.  லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி, பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், அஷ்வின், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபலா, பிரபு, விக்ரம் பிரபு, ரஹ்மான், பிரகாஷ் ராஜ், நாசர் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | புது மாஸ் அப்டேட்…மீண்டும் இணையும் ஜெயம் ரவி - கார்த்தி


பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது, இப்படம் உலகளவில் ரூ.500 கோடி வரை வசூல் செய்திருந்தது.  பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல்-28ம் தேதியன்று வெளியாகி இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்திருந்தது.  படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து மொத்தமாக ரூ.1000 கோடி அளவில் வசூல் செய்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்று பல பிரபலங்கள் முயற்சி செய்திருக்கின்றனர், ஆனால் அனைவரது முயற்சியுமே தோல்வியை தழுவியது.  நாவலை படித்தவர்கள் படத்தை நினைத்து கொஞ்சம் அதிருப்தி அடைந்திருந்தாலும், மணிரத்னத்தின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.  இப்படத்திற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யா படத்தை பார்த்துவிட்டு என்ன கருத்தை தெரிவித்தார் என்பதை கார்த்தி கூறியுள்ளார்.


பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் எனும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார்.  இந்த நாவலை படித்த பலருக்கும் வந்தியத்தேவன் கதாபாத்திரம் மிகவும் பிடித்தமான ஒரு கதாபாத்திரமாக இருக்கிறது.  கார்த்தியின் சகோதரனும், நடிகருமான சூர்யா 'பொன்னியின் செல்வன்-2' படத்தை மும்பையில் தனது மனைவி மற்றும் மனைவியின் பெற்றோருடன் சேர்ந்து பார்த்து ரசித்திருக்கிறார்.  படத்தை பார்த்துவிட்டு சூர்யா, கார்த்தியிடம் கூறுகையில், தமிழ் சினிமாவால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நினைத்து பெருமைப்படுவதாக கூறியுள்ளார்.  இந்த படத்தில் நடித்திருந்த அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் படத்திற்காக பாடுபட்ட படக்குழுவினர் அனைவரையும் சூர்யா பாராட்டியதாக கார்த்தி கூறியுள்ளார்.  மேலும் பேசியவர்,  எம்.ஜி.ராமச்சந்திரனை நடிக்க அணுகிய கார்த்தியின் தந்தை சிவக்குமார் காலத்தை நினைவுகூர்ந்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.  எங்கள் குடும்பத்துக்கே பிடித்த பொன்னியின் செல்வன் நாவலிலுள்ள கதாபாத்திரங்களை திரையில் காண எங்கள் குடும்பத்தினர் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர்.  எனது தந்தை சிவகுமார் அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடிக்கவே பெரிதும் விரும்பினார் என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க | ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை, அவர் ஒரு ஜீரோ! வெளுத்து வாங்கிய அமைச்சர் ரோஜா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ