‘கங்குவா’ படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துக்கொண்ட சூர்யா! ஏன் தெரியுமா?
Actor Suriya Salary For Kanguva : நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
Actor Suriya Salary For Kanguva :தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், சூர்யா. தற்போது இவர், ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டீசர், போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கும் நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களும் நடிகர் சூர்யா இப்படத்திற்காக செய்த காரியங்களும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
கங்குவா திரைப்படம்..
தமிழில் திரையுலகில், பல நாட்களுக்கு பிறகு உருவாகும் ஃபேண்டசி த்ரில்லர் திரைப்படம், கங்குவா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, நட்ராஜன், ஜகபதி பாபு, பாபு டியோல் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கதாநாயகியாக, பாலிவுட் நாயகி திஷா பதானி நடிக்கிறார். இப்படத்திற்காக அவர்களுக்கு பிரத்யேக சண்டை பயிற்சிகள், சாகச பயிற்சிகள் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.
குறைவாக சம்பளம் வாங்கிய சூர்யா..
நடிகர் சூர்யா, தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் மட்டுமல்ல, அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்களுள் ஒருவரும் கூட. இவர், ஒரு படத்திற்கு சுமார் ரூ.60 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. ஆனால், கங்குவா படத்திற்காக தனது சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளாராம். இதற்கான காரணம் குறித்து, திரை வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசிக்கொள்கின்றனர். அது என்ன தெரியுமா?
காரணம் என்ன?
நடிகர் சூர்யா நடிப்பில் 2016ஆம் ஆண்டு, ‘24’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை விக்ரம் குமார் இயக்கி இருந்தார். இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. ‘24’ திரைப்படம், விமர்சன ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பயங்கரமான அடி வாங்கியது. 24 படம், சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என்பதால், இதனை படமாக்குவதற்கு அதிகமாக செலவானது. ஆனால் படம் வெளியான பிறகு, போட்ட பட்ஜெட்டில் பாதி கூட வசூல் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் நஷ்டத்தை சந்திக்க வேண்டி இருந்தது. இதையடுத்து, அதனை ஈடு செய்யும் வகையில் நடிகர் சூர்யா தனது சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ்ஜின் அடுத்த படம் ‘பென்ஸ்’-ஹீரோ யார் தெரியுமா?
கங்குவா படத்தின் பட்ஜெட் என்ன?
தற்போது உருவாகி வரும் கங்குவா படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பவர்களும் பல கோடி சம்பளம் வாங்கும் பாலிவுட் பிரபலங்கள் என்பதால், படத்தின் பட்ஜெட் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம், 300 முதல் 350 கோடி வரை இப்படத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதுவரை உருவாகியுள்ள ஹை-பட்ஜெட் இந்திய படங்களுள், கங்குவா திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது.
பல வேடங்களில் சூர்யா?
நடிகர் சூர்யா, கங்குவா படத்திற்காக பல்வேறு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. பேரழகன், வேல், வாரணம் ஆயிரம் உள்பட சில படங்களில் அவர் 2 வேடங்களில் நடித்திருந்தாலும், கங்குவா படத்தில் அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரிலீஸ் எப்போது?
கங்குவா திரைப்படத்தின் 80 % படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. முழுமையாக படப்பிடிப்பு முடிந்தவுடன் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ