Salman Khan : சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு! கொலை முயற்சியா? நடிகருக்கு என்ன ஆனது?

Actor Salman Khan Latest News : பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் விட்டருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ள விவகாரம் பாலிவுட் திரையுலகில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Actor Salman Khan Latest News : பாலிவுட்டின் டான் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர், நடிகர் சல்மான் கான். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், இந்தியில் பிரபல நிகழ்ச்சியாக இருக்கும் ‘பிக்பாஸ்’ ஷோவையும் தொகுத்து வழங்கு வருகிறார். இவருக்கு, தமிழ்நாட்டிலும் பல லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர். சல்மான் கான், மும்பையில் தங்கி வருகிறார். இன்று காலை இவரது வீட்டருகே துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் பாலிவுட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

1 /7

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர், சல்மான் கான். இவர் மும்பையில் உள்ள பாந்த்ரா எனும் இடத்தில் தங்கியிருக்கிறார். இன்று, இவரது வீட்டருகே துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. 

2 /7

அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளதாக, போலீஸார் தரப்பில் தெரிவிக்கிப்பட்டுள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.

3 /7

இந்த சிசிடிவி காட்சிகளில், பைக்கில் ஹெல்மென் அணிந்து வரும் இருவர் சல்மான் கானின் இல்லத்திற்கு அருகே 3 முறை துப்பாக்கி சூடு நிகழ்த்துவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் மிகவும் இருளாக இருப்பதால், இவர்கள் யார் என்பது தெரியவில்லை. 

4 /7

நடிகர் சல்மான் கானிற்கு 2022ஆம் ஆண்டு ஏற்கனவே லாரன்ஸ் பிஷ்னாய் என்ற கேங்க்ஸ்டர், கொலை மிரட்டல் விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவருக்கு Y-Plus பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. சல்மான் கான், லைசன்ஸ் வாங்கப்பட்ட துப்பாக்கியையும் வைத்திருக்கிறார். அது மட்டுமன்றி, இவரது கார் புல்லட் ப்ரூஃப் அம்சம் கொண்டதாகவும் இருக்கிறது. 

5 /7

பைக்கில் வந்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பதை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே சல்மான் கானின் ரசிகர்கள், “நல்லவர்களுக்கு ஒன்றும் ஆகாது” என்று ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

6 /7

சல்மான் கான் இருக்கும் வீட்டை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுடும் சத்தத்தை ஒருவர் கேட்டதாக போலீஸாரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அவரிடம் போலீஸார் மேலும் விசாரணையை நடத்தி வருகின்றனர். 

7 /7

சல்மான் கான் வீட்டருகே துப்பாக்கி சூடு நடைப்பெற்றதை தொடர்ந்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு வலுபடுத்தப்பட்டுள்ளது.