Actor Vijay: நடிகர் விஜய் கடந்த ஜூன் 17ஆம் தேதி 10 மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை அழைத்து கல்வி விழா நடத்தியது தமிழ்நாடு முழுவதும் ரீச் ஆனது. அந்த நிகழ்ச்சியில் பணம் வாங்காமல் வாக்களிப்பது, பெரியார், அண்ணா போன்றவர்களை படியுங்கள் என்றெல்லாம் அரசியல் குறித்து பேசி சூட்டை கிளப்பினார். அதன்பிறகு பல அரசியல் தலைவர்களும் விஜய்யின் அரசியல் ஆசைக்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் ரசிகர்களின் போஸ்டர்கள்


விஜய் படங்களை விமர்சிக்கும் பாஜகவினர் கூட அவரது அரசியல் ஆசைக்கு வரவேற்பு அளித்தனர். நடிகர் விஜய் நாளைய வாக்காளர்களை குறிவைத்து ராஜ தந்திரத்துடன் செயல்பட்டுள்ளதாகவும் பாராட்டப்பட்டார். இதன் தொடர்ச்சியாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், நாளைய முதல்வரே, தமிழகத்தை ஆளப்போகும் தமிழனே என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டி அமர்க்களப்படுத்தினர். விஜய்யின் பிறந்தநாள் வேறு வந்துவிட்டதால் இந்த போஸ்டர்கள் சில எல்லை மீறி இருந்தது. விஜய் நடிகரா அல்லது அரசியல் கட்சி தலைவரா என்ற சந்தேகம் வரும் அளவுக்கு அவரது ரசிகர்கள் போஸ்டர்களில் தெறிக்கவிட்டனர். 


பிறந்தநாள் கொண்டாட்டம்


லியோ படத்தின் அப்டேட்டுகள் சில இதற்கு நடுவே வந்த போதும் கூட, அதனை கவனிக்காமல் அவரது அரசியல் வருகை பற்றிய விவாதம் தான் இணையத்தையும் ஆக்கிரமித்துள்ளது. இப்படி சென்று கொண்டிருக்கும் சூழலில் வசமாக நெட்டிசன்களிடம் சிக்கியுள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர் சிலர்.  



மேலும் படிக்க | 49வது பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யைப் பற்றி 49 வெளிவராத உண்மைகள்


தமிழகம் முழுவதும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்தனர். அரசு மருத்துவமனையில் ஜூன் 22-ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் போட்டது, உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு பெட்ரோல், உணவு உள்ளிட்டவற்றை வழங்கியது, நரிக்குற குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியது என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது.


நலத்திட்ட உதவிகள் வழங்கல்


அப்படித்தான் நடிகர் விஜய்யின் 49ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை புறநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  நீலாங்கரையில் நடைபெற்றது.  இதில் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை ஜோடியான ராஜ்கமல் மற்றும் லதாராவ் கலந்து கொண்டனர். 


ஸ்டிக்கர் அரசியல்


அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு தையல் மிஷின்கள், 3 சக்கர வாகனங்கள், அரிசி, புடவை மற்றும் பக்கெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது.  உதவி தானே செய்தார்கள், இதில் என்ன தவறு என்று தானே யோசிக்கிறீர்கள். ஆரம்பத்தில் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது. அதன்பிறகு தான் பலரும் இதை நோட் செய்தார்கள். அதாவது மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து பொருட்களிலும் விஜய்யின் படம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. 



அதுமட்டும் இல்லாமல் புஸ்ஸி ஆனந்த் தனது ஒரு கையில் விஜய்யின் புகைப்படம் இருக்கும் புக்கை விளம்பரத்துக்காக கேமரா முன் நன்றாக காட்டியபடியே உள்ளார். மற்றொரு கையில் தான் பொருட்களை வழங்குகிறார். இதைப் பார்த்த பலரும், உதவி தானே செய்கிறீர்கள் இதற்கு எதற்கு விளம்பரம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இரண்டு கைகளில் நலத்திட்ட உதவிகளை செய்தால் தான் என்ன என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 


வழக்கம்போல்...


விஜய் மாற்றத்தை கொண்டு வருவார், மாணவர்கள் முன் புரட்சிகரமாக பேசுகிறார் என்றெல்லாம் விஜய்யை புகழ்ந்தவர்கள் தற்போது ஷாக்கில் உள்ளனர். கல்வி விழாவில் 10 மணி நேரத்துக்கும் மேலாக நின்று கொண்டு மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி, பாசமாக நடந்து கொண்ட விஜய்யின் பெயரை புஸ்ஸி ஆனந்த் கெடுப்பதாக அவரது ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியை விட விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஓவர் விளம்பரமாக நடந்துகொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 



இப்படியே போனால் விஜய் சம்பாதிக்கும் நற்பெயர்கள் எல்லாம் வீணாகிவிடும் என அவரது உண்மையாக ரசிகர்கள் கதறுகின்றனர். பொதுவாக திமுக, அதிமுகவினர் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது கட்சி தலைவரின் புகைப்படத்தை ஒட்டினால் ஸ்டிக்கர் பாய்ஸ் என கலாய்க்கும் நபர்களிடம் தான் விஜய் மக்கள் இயக்கத்தினரும் இப்போது சிக்கியுள்ளனர். விஜய்யின் கவனத்துக்கு இது செல்லுமா? இனியாவது இவர்கள் திருந்துவார்களா? அல்லது இவர்களும் asusual அரசியலை தான் கையில் எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


மேலும் படிக்க | சரித்திரத்தில் இடம் பிடித்த தளபதி..அமெரிக்காவின் பிரபல கட்டத்தில் விஜய்யின் வீடியோ ஒளிபரப்பு..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ