GOAT Movie Budget : கோலிவுட்டின் டாப் நடிகராக வலம் வருபவர், நடிகர் விஜய். இவர், முதன் முறையாக வெங்கட் பிரபுவுடன் கைக்கோர்த்திருக்கும் படம், GOAT (The Greatest Of All Time). இந்த படம், இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவிற்கு சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாக உருவாகி வருகிறது. இந்த படத்தில், விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

GOAT:


கோட் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதிருக்கும் எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த அவர், திரையுலகில் இருந்து விலக இருக்கிறார். அவரது கடைசி படத்திற்கு முந்தைய படம்தான், கோட். அது மட்டும் இந்த எகிறும் எதிர்பார்ப்பிற்கு காரணம் அல்ல. தமிழ் திரையுலகின் ஜாலி இயக்குநர்களுள் ஒருவராக இருக்கும் வெங்கட் பிரபு, விஜய்யை வைத்து முதன்முறையாக ஒரு படத்தை இயக்குவதும்தான். 


பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகியிருந்த மைக் மோகன், கோட் படம் மூலம் கம்-பேக் கொடுக்க இருக்கிறார். விஜய்யுடன் சேர்ந்து சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனாலும், இப்படத்தின் ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். 


பட்ஜெட் எவ்வளவு? 


பொதுவாகவே, தற்போது இந்திய சினிமாவில் உருவாகி வரும் படங்ளின் பட்ஜெட் விண்ணை தொடும் அளவிற்கு இருக்கின்றன. அதிலும் சயின்ஸ் ஃபிக்ஷன் கதை என்றால் கேட்கவா வேண்டும்? கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம், 250 கோடி செலவில் உருவானதாக கூறப்படுகிறது. அதில் கால் பங்கு தொகை, விஜய்யின் சம்பளம் மட்டும் என கிசுகிசுக்கப்படுகிறது. தற்போது, கோட் திரைப்படத்தின் பட்ஜெட்டும் பெரிது, விஜய்யின் சம்பளமும் பெரிது. 


கோட் திரைப்படம், சுமார் ரூ.300 கோடி செவலில் உருவாகி வருவதாக, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய உருப்பினர் சுரேஷ் கல்பாத்தி ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். தங்களின் தயாரிப்பில் உருவான முதல் பெரிய பட்ஜெட் படம் கோட்தான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 


மேலும் படிக்க | விஜய்யுடன் எடுத்த பிரைவேட் புகைப்படத்தை வெளியிட்ட த்ரிஷா! “ஒரு வேள இருக்குமோ..”


கோட் பட அப்டேட்..


கோட் திரைப்படத்தின் கதை, ஹாலிவுட்டில் வெளியான ‘ஜெமினி மேன்’ படத்தின் கதைதான் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் வெளிநாட்டில் நடைப்பெற்று வந்ததை தொடர்ந்து, கேரளாவிலும், இலங்கையிலும் படப்பிடிப்பு நடந்ததது. இன்னும் கொஞ்சம் வேலைகள் இருப்பதாகவும், இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும், விரைவில் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. படம், வரும் செப்டம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 


மேலும் படிக்க | 'கோட்' படத்தில் விஜயுடன் ஒலிக்கும் பவதாரிணி குரல்.. விஜய் பிறந்தநாளில் ட்ரீட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ