இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதையொட்டி  சுதந்திர நாளான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று சமூக வலைதளங்களில் அனைவரும் தங்களது முகப்பு படமாக தேசியக்கொடியை வைக்க வேண்டுமென பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். அதேபோல் தங்களது வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து பிரதமர் தனது ட்விட்டர் முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்தார். அவரைத் தொடர்ந்து பலரும் தங்களது சமூக வலைதள முகப்பு படமாக தேசிய கொடியை வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் கூறியதை அடுத்து ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் தேசியக்கொடிக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனையும் நடைபெற்றுவருகிறது. பலரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் ரஜினிகாந்த்தும் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார்.



இந்நிலையில் நடிகர் விஜய்யும் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார். விஜய் மட்டுமின்றி திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோரின் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. விஜய் தனது வீட்டில் தேசிய கொடியை ஏற்றியதை அடுத்து விஜய் சினிமாவில் மட்டுமில்லை அரசியல் களத்திலும் ரஜினியைத்தான் ஃபாலோ செய்கிறாரா என சிலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். 


மேலும் படிக்க | RSS அமைப்பின் சமூக ஊடக பக்கங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது


முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “ந்த ஆண்டு நமது நாடு சுதந்திரம் பெற்ற 75ஆவது ஆண்டு. இந்தியா சுதந்திர அடைவதற்கு எத்தனையோ வருடங்கள், பல லட்சம் பேர் எத்தனையோ சித்ரவதைகளையும், கொடுமைகளையும் அனுபவத்திருக்கின்றனர்.


 



அவர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சாதி, மதம், கட்சி வேறுபாடின்றி அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த்” என பேசி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ