சென்னை: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு 1.30 கோடி நிவாரண நிதியுதவி அளித்த நடிகர் விஜய். கடந்த சில மாதமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் மெதுவாக பரவிய வைரஸ், கடந்த ஒரு மாதமாக மிக வேகமாக இந்தியா முழுவதும் பாதித்து வருகிறது. இதனையை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இரண்டாவது முறையாக மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் நாட்டில் பரவி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்த அனைவரும் முடிந்த அளவுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்திருந்தார். அதேபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனாவை எதிர்த்து போராட  அனைவரும் மாநிலத்திற்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனையடுத்து மத்திய மாநில அரசுகளுக்கு பல தரப்பில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. 


சாதரண மக்கள் தொடங்கி டாடா, ரிலையன்ஸ் என பெரிய தொழில் அதிபர்கள் நிவாரண உதவி அளித்தனர். அதில் பல திரையுலக பிரபலங்களும் லட்சம் முதல் கோடி வரை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதியுதவி அளித்தனர். 


அந்த வரிசையில், தமிழக திரை உலகின் முன்னணி நட்சத்திரம் மற்றும் முதலிடத்தில் இருக்கும் நடிகர் விஜய் 1.30 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். 


அதில் இதில் ரூ. 25 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கும், 50 லட்சம் ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கும் கொடுத்துள்ளார். அதேபோல அண்டை மாநிலங்களான கேரளாவுக்கு ரூபாய் 10,  கர்நாடகா, ஆந்தரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரிக்கு தலா ரூ. 5 லட்சம் என நிதியுதவி அளித்துள்ளார். 


அதேபோல ரூ. 25 லட்சம் பெப்ஸி தொழிலாளர்களின் நலனுக்காகவும் நிதி உதவி செய்துள்ளார்.