பாகுபலி திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப்பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் இப்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் (இரத்தம் ரணம் ரெளத்திரம்). தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. லீட் ரோலில் தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி ஹீரோக்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஆஸ்கார் மேடையில் கண்ணீர் விட்ட தீபிகா படுகோனே! இதுதான் காரணம்!


’ஆர்.ஆர்.ஆர்’ (RRR) திரைப்படத்தின் புத்தாண்டு ஸ்பெஷல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமௌலி மற்றும் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். டிடி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், விஜய் குறித்து ஜூனியர் என்.டி.ஆர், கொடுத்த பதில், விஜய் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. புரோமோவில் பேசிய ஜூனியர் என்.டி.ஆர்," தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற தலைக்கணம் இளையதளபதி விஜய்க்கு இருந்ததே இல்லை. நான் பலமுறை அவரிடம் பேசியிருக்கிறேன். ஒருமுறைகூட அவரிடம் நான் அதைப் பார்த்ததில்லை. மிகவும் இயல்பாக இருக்கக்கூடியவர். 


மேலும் படிக்க | Oscars 2023: ஆஸ்கார் வென்ற நாட்டு நாட்டுப் பாடலைப் பாடியவர் யார் தெரியுமா?


திரைப்படத்துறையைப் பொறுத்தவரை எனக்கு ஒரு நல்ல நண்பர். மாஸ்டர் திரைப்படம் வெளியானபோது கூட அவரிடம் தொலைபேசியில் பேசினேன். விஜய்யோட நடனத்துக்கு நான் ஒரு மிகப்பெரிய ஃபேன். பிரண்ட் என்றாலும், நான் அவரை எனக்கு வழிகாட்டியாகவே பார்க்கிறேன்" என மனம் நெகிழ்ந்து பேசியுள்ளார். அண்மையில் ஒரு பிரஸ்மீட்டில் பேசிய ஜனியர் என்.டி.ஆர், விஜய், தனுஷ் ஆகியோர் நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஜூனியர் என்.டி.ஆரின் இந்த அணுகுமுறை விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல், இந்த நிகழ்ச்சியில் அஜித் குறித்து ராஜமௌலி பகிர்ந்து கொண்ட விஷயங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR