பீஸ்ட் படத்தை முடித்த கையுடன் தளபதி 66 திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருகிறார் விஜய். இப்படத்தின் சூட்டிங் ஏற்கனவே சென்னையில் தொடங்கி, சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.  தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் உட்சத்தில் இருக்கும் அவர் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தளபதி 66 படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவை நடிகர் விஜய் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். சந்திரசேகர ராவின் மருமகன் சந்தோஷ் குமார் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார்.


மேலும் படிக்க  | அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா?- விஜய் சொன்ன பதில் என்ன?


.


 



 



 


 



முன்னதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்த விஜய், அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்தார். அண்மையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்ட நிலையில், நடிகர் விஜய் அடுத்தடுத்து பல்வேறு மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மேலும் படிக்க | விஜய்யின் அரசியல் சந்திப்பு : திட்டம் என்ன!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR